அரியலூர் மாணவி லாவண்யாவின் தற்கொலையை சிபிஐ விசாரிக்க கூடாது என்று திமுக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடி இருந்தது. இந்த நிலையில் தான், மாணவியின் தற்கொலையில் முக்கிய குற்றவாளி என்று கூறப்படும் சகாயமேரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டம் வடுகபாளையாம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகானந்தம். இவரது மகள் லாவண்யா, தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள மைக்கேல்பட்டியில் அமைந்திருக்கும் தூய இருதய மேல்நிலைப்பள்ளி விடுதியில் தங்கி 12-ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்த, இவரை கிறிஸ்தவ மதத்திற்கு மாற பள்ளி ஆசிரியர்கள் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதற்கு மாணவி லாவண்யா மறுப்பு தெரிவித்து தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவத்திற்கு ஜாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்து தரப்பு மக்களும் தங்களது உணர்வுகளையும், கோவத்தையும், வெளிப்படுத்தி இருந்தனர். குறிப்பாக, லாவண்யாவின் பெற்றோர் இன்று வரை நீதி கேட்டு போராடி வருகின்றனர். மேலும், மாணவியின் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க கூடாது என்று தமிழக அரசு சமீபத்தில், உச்சநீதிமன்றத்தை அணுகி இருந்தது. இந்த நிலையில் தான், மாணவி லாவண்யாவின் தற்கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி என்று கூறப்படும் சகாயமேரிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. இதற்கு தமிழக அரசு தனது கடும் எதிர்ப்பினை பதிவு செய்ததா என்பது மில்லியன் டாலர் கேள்வி.
தி.மு.க ஆட்சியில் இருந்த சமயத்தில் சேலம் பாத்திமா கிறிஸ்தவப் பள்ளியில் படித்த மாணவி சுகன்யா, பாலியல் பலாத்காரம் செய்யபட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதற்கே இன்று வரை நீதி கிடைக்காத நிலையில், லாவண்யாவின் தற்கொலை வழக்கையும் மூடி மறைக்க தி.மு.க அரசு முயல்கிறதோ என்னும் ஐயம் மக்களிடம் தற்பொழுது எழுந்து உள்ளது.