உள்ளாட்சித் தேர்தல் உள்குத்து: உ.பி.க்கள் டிஷ்யூம்… மக்கள் அச்சம்!

உள்ளாட்சித் தேர்தல் உள்குத்து: உ.பி.க்கள் டிஷ்யூம்… மக்கள் அச்சம்!

Share it if you like it

உள்ளாட்சித் தேர்தல் வந்ததும் வந்தது, உ.பிஸ்களின் அட்ராசிட்டி எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. உட்கட்சி உள்குத்தால் கோஷ்டிப் பூசல் மோதல்கள் அதிகரிக்கத் தொடங்கி இருக்கிறது. இதில், 2 கொலை சம்பவங்கள் அரங்கேறி இருப்பதுதான் கொடூரத்தின் உச்சக்கட்டம்.

தி.மு.க. என்றாலே கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, வன்முறை என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது கோஷ்டிப் பூசலும் உச்சத்தில் இருக்கிறது என்பதோடு, உட்கட்சியிலேயே வெட்டுக்குத்து என்று நிலைமை கைமீறிச் சென்று கொண்டிருக்கிறது. அந்த வகையில், சமீபத்தில் பாளையங்கோட்டையில் மாநகராட்சி கவுன்சிலர் பதவிக்கான சீட் பெறுவதில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் தி.மு.க. நிர்வாகி ஒருவரை, அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் வெட்டிக் கொலை செய்தனர். இந்த பரபரப்பு அடங்குவதற்குள், சென்னை மடிப்பாக்கத்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த ஒருவர், லோக்கல் கட்சியினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

இந்த நிலையில்தான், தென்காசி நகராட்சி கவுன்சிலர் தேர்தலில் சீட் பெறுவதில் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் சிவபத்மநாபனுக்கும், இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜதுரைக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்திருக்கிறது. இந்த சூழலில், தங்களது மாவட்டத்துக்கு வருகைதரும் அமைச்சர் கே.கே.எஸ்.ஆர்.ராமச்சந்திரனை வரவேற்பதற்காக சிவபத்மநாபன் காரில் சென்றிருக்கிறார். அமைச்சர் வர தாமதமானதால், குத்துக்கல்வலசை பகுதியிலுள்ள டீக்கடையில் காரை நிறுத்தி டீக்குடித்திருக்கிறார். அப்போது, ராஜதுரையும் அங்கு வந்திருக்கிறார். அங்கு இருவருக்கும் இடை வாய்த்தகராறு ஏற்பட்டிருக்கிறது.

இதையடுத்து, சிவபத்மநாபன் காரில் ஏறி கிளம்பி இருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த ராஜதுரை, அங்கிருந்து குப்பைத் தொட்டியை தூக்கி சிவபத்மநாபனின் கார் மீது வீசியிருக்கிறார். இதில், காரின் கண்ணாடி உடைந்தது. இதுகுறித்து அவரது ஆதரவாளர்கள் போலீஸில் புகார் செய்திருக்கிறார்கள். இச்சம்பவம்தான் தமிழகத்தில் பெரும் பதட்டத்தை உருவாக்கி இருக்கிறது. 200 ரூபாய் உ.பிஸ்களால் தமிழகத்தில் இன்னும் என்னென்ன வன்முறை சம்பவங்கள் எல்லாம் அரங்கேறப்போகிறதோ என்ற அச்சத்தில் மக்கள் உறைந்துபோய் இருக்கிறார்கள்.


Share it if you like it