தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும், பிரபல யூ-டியூப்பர் மதன் கெளரி வரலாறு தெரியாமல் உளறி கொட்டிய காணொளி மக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க ஆட்சி அமைந்த பின்பு பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் குற்ற சம்பவங்கள் தொடர்பான செய்திகள் அதிகம் வந்த வண்ணம் உள்ளது. பாலியல் தொல்லை காரணமாக கோவை மாணவி பொன்தாரணி தற்கொலை செய்து கொண்டது, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் 5-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவரின் உடல் எரிந்த நிலையில் மீட்கப்பட்டது. கோவையில் காணாமல் போன பள்ளி சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் மற்றும் சென்னையை அடுத்த மாங்காடு பகுதியை சேர்ந்த மாணவி ஒருவர், பாலியல் தொல்லை காரணமாக சில மாதங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டது என பள்ளி சிறுமிகளுக்கும், பெண்களுக்கும், பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழகம் மாறி வருகிறது என்று பொதுமக்கள் பகீர் குற்றச்சாட்டை சுமத்தும் சூழல் தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டு உள்ளது.
பா.ஜ.க, இந்து முன்னணி, வி.ஹெச்.பி மற்றும் பல்வேறு ஹிந்து அமைப்புகள் மட்டுமே, தி.மு.க ஆட்சியில் நிகழும் அட்டூயிழங்களையும், அடாவடிகளையும் மக்களிடம் இன்று வரை கொண்டு சேர்த்து வருகின்றனர். ஆனால் தி.மு.க-வின் தீவிர ஆதரவாளர் என்று அழைக்கப்படும், பிரபல யூ-டியூப்பர் மதன் கெளரி வரலாறு தெரியாமல் உளறி கொட்டி மாட்டிய சம்பவம் ஒன்று மக்கள் மத்தியில் தற்பொழுது பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. அது குறித்த லிங்க் இதோ.