ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடுமையான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அந்நாட்டில் உள்ள தமது குடிமக்களை திரும்பி அழைத்து வர இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அந்த வகையில். மத்திய அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகளை தமிழக அரசு செய்வது போல தி.மு.க அரசு ஒரு மாயதோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன், இடையே போர் மேகம் சூழ்ந்ததை தொடர்ந்து, அந்நாட்டில் இருந்து உடனே வெளியேறுமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு கடந்த பிப்ரவரி 15-தேதி அறிவுரை வழங்கி இருந்தது. அதனை தொடர்ந்து, பல்வேறு நடவடிக்கைகளை மோடி தலைமையிலான அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
விமானங்கள் தனது நாட்டு எல்லைக்குள் பறக்க உக்ரைன் அரசு தடை செய்திருப்பதால். இந்திய வெளிவிவகாரத்துரை அமைச்சகம் இந்தியர்களை அந்நாட்டில் இருந்து வெளியேற்றும் விதமாக ஹங்கேரி, போலந்து, ஸ்லோவாக் குடியரசு மற்றும் ருமேனியாவின் வழியாக அவர்களை அழைத்து வர குழுக்களை அனுப்பியுள்ளதாக செய்திகள் வருகிறது. உக்ரைனுடன் இந்நாடுகள் எல்லைகளை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இந்த நான்கு நாடுகளிடம் உள்ள முக்கிய நபர்களிடம் பேசியுளதாக ட்வீட் செய்துள்ளார்.
மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சூழலில், உக்ரைனில் சிக்கியுள்ள தமிழர்களை போலந்து, பெலாரஸ் வழியாக மீட்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளதாக, தி.மு.க-வின் ஆதரவு ஊடகமான புதிய தலைமுறை ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையில் ஸ்டிக்கர் ஒட்டும் பணியை வழக்கம் போல தமிழக அரசு மேற்கொண்டுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.