வெற்றி பெற்ற பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தி.மு.க: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்!

வெற்றி பெற்ற பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட தி.மு.க: அதிர்ச்சியில் உறைந்த கிராம மக்கள்!

Share it if you like it

பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்றதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் தி.மு.க-வை சேர்ந்தவர்கள் வெற்றி பெற்ற பிறகு கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப், 19.2.2022 அன்று நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலின் முடிவுகள் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டது. அதிகார பலம், படை பலம், கூட்டணி பலம், பொய் பிரச்சாரம், ஊடக பலம், கொலூசு, பிரியாணி, பட்டுபுடவை என்று ஏராளமான பரிசு பொருட்களை பொதுமக்களுக்கு வாரி வழங்கி தேர்தலில் வெற்றியை வாங்கியுள்ளது தி.மு.க என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. திட்டமிட்டு ஜனநாயக படுகொலையை ஆளும் கட்சி நிகழ்த்தியுள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

அந்த வகையில், மோசமான வழியை பின்பற்றி வெற்றி பெற்ற தி.மு.க-வினருக்கு பலரும் கடும் கண்டனங்களையும், தங்களது எதிர்ப்புகளையும் முகநூல், ட்விட்டர், வாட்சப் என பல்வேறு சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். அதனை தொடர்ந்து தி.மு.க எவ்வாறு எல்லாம் முறைகேடான வழியில் சென்றது என்பதற்கான ஆதாரங்களும், காணொளிகளும் ஒவ்வொன்றாக தற்பொழுது வெளிவந்து கொண்டு இருக்கிறது. அதனை மெய்ப்பிக்கும் விதமாக கரூர் மாவட்டத்தில் அரங்கேறிய கூத்து ஒன்று தற்பொழுது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

ஆம், அது என்னவெனில் கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 7 வார்டில் போட்டியிட்டவர் தி.மு.க வேட்பாளர் சாந்தி. இவர், குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காடிபாளையம் பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாகியுள்ளதால், கடும் அதிர்ச்சிகுள்ளான தி.மு.க-வினர் அப்பகுதிக்கு சென்று கொடுத்த பணத்த்தை திருப்பி கேட்டு பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்த காணொளி தற்பொழுது வைரலாகி வருகிறது.


Share it if you like it