தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்கிய இடத்தில் போதிய வசதிகள் இல்லை என்று நரிக்குறவர்கள் வேதனை.
மாபல்லபுரம் பூஞ்சேரி கிராமம் நரிக்குறவர் மற்றும் இருளர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தீபாவளியன்று வீட்டுமனை பட்டா வழங்கினார். அவர் வழங்கிய இடம் தங்களுக்கு பிடிக்கவில்லை என்று நரிக்குறவர்கள் தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து உள்ளனர். இது குறித்த செய்தியினை பிரபல இணையதள ஊடகமான தினமலர் செய்தியாக வெளியிட்டு உள்ளது.
நரிக்குறவர் மற்றும் இருளர் இனத்தை சேர்ந்த மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகள் குறித்து முதல்வர் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவு செய்து இருந்தார்.
முதல்வர் டுவிட்டர் பதிவை ரீ-டுவீட் செய்த நடிகர் சூர்யா, ‘‘மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் எளிய பழங்குடிமக்களின் இல்லம் தேடிச்சென்று வழங்கியிருப்பது வெறும் பட்டா அல்ல, புதிய நம்பிக்கை. காலங்காலமாக தொடரும் எளிய மக்களின் இன்னல்களுக்கு, நிரந்தர தீர்வு கிடைக்கும் என்கிற நம்பிக்கையை அளித்துள்ளது என்று கருத்து தெரிவித்து இருந்தார்.
வீடும் வேண்டாம், இடமும் வேண்டாம், என்று நரிக்குறவர்கள் போராட்டம் நடத்தியுள்ளதை அறிந்த பின்பும் நடிகர் சூர்யா ஏன்? மெளனமாக இருக்கிறார் என்று சமூக வலைத்தளங்களில் கேள்விகள் எழுந்து வருகிறது. விடியல் முதல்வரின் விளம்பர ஆட்சியில் இன்னும் என்னவெல்லாம் தமிழக மக்கள் சந்திக்க போகிறார்களோ என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.