இந்திய தூதரகம் வட இந்திய மாணவர்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாக தமிழக ஊடகங்கள் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தது. அது பொய் செய்தி என்று மாணவி ஒருவர் உண்மையை கூறிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
உக்ரைனில் சிக்கி இருந்த இந்தியர்களை மீட்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதன் காரணமாக, பலர் தாயகம் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய மாணவர்களோடு சேர்த்து பாகிஸ்தான், பங்களாதேஷ் மாணவர்களையும் மத்திய அரசு மீட்டு உள்ளது. பாகிஸ்தான் மாணவி ஒருவர் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட காணொளியை இன்றும் சமூக வலைத்தளங்களில் காண முடியும். அதே போல, பங்களாதேஷ் பிரதமர் சேக் அசீனா. மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து உள்ளார். இப்படியாக, சிறிய நாடுகள் முதல் வல்லரசு நாடுகள் வரை இந்தியாவின் மீட்பு பணியை வியப்புடன் பார்த்து வருகிறது.
அந்த வகையில், உலகம் முழுவதிலும் இருந்து மோடி அரசுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. தமிழகம் தவிர மற்ற மாநில முதல்வர்கள் மத்திய அரசின் பெரு முயற்சிக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும், தெரிவித்து வருகின்றனர். ஆனால், தமிழகத்தை சேர்ந்த சில மாணவர்கள் இந்திய தூதரக அதிகாரிகள் எங்களிடம் ஹிந்தி மொழியில் பேசினார்கள். வடமாநில மாணவர்களுக்கு மட்டுமே, அதிக முக்கியத்துவம் வழங்கப்பட்டதாக கூறியிருந்தனர். அந்த வகையில், தமிழகத்தை சேர்ந்த மாணவி ஒருவர், இந்திய தூதரகம் எங்களை நல்ல முறையில் நடத்தியது. தமிழிலும் தூதரக அதிகாரிகள் பேசியதாக கூறியுள்ளார். இவரின் இந்த கருத்து போலி செய்திகளை பரப்பிய நபர்களுக்கு சம்மட்டியாக விழுந்து இருக்கும் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.