திராவிடர் கழகத் தலைவர் வீரமணி பற்றி ஏற்கெனவே ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. அதேபோல, தற்போது தமிழக நிதியமைச்சர் பி.டி..ஆர்.பழனிவேல் தியாகராஜன் குறித்த காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு முறையான பதிலை அளிக்காமல். விமர்சனம் செய்வதும் அல்லது கிண்டல் செய்வதும், கோவமாக கடிந்து கொள்வதும் என மனம் போன போக்கில் தனது எண்ணத்தை வெளிப்படுத்தி வருகிறார். இந்த சூழலில், நிதிப் பற்றாக்குறைக் காரணமாக அம்மா உணவகத்தில் 4,000 ஊழியர்களை பணியிடை நீக்கம் செய்தது குறித்து பத்திரிகையாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு, அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்று பொறுப்பற்ற முறையில் பதில் சொன்னார்.
அதேபோல, உ.பி.யில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. மீட்டிங்கில் கலந்துகொள்ளாமல், வளைகாப்பு நிகழ்ச்சிக்கு சென்றேன் என்று சிறுபிள்ளைத் தனமாக கூறினார். மேலும், பெட்போரல், டீசல் விலை எப்பொழுது குறையும் என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியதற்கு, ’தேதி போட்டாங்களா’ என்று பொங்கினார். இந்த ’தேதி போட்டாங்களா’ என்று நிதியமைச்சர் பிடி.ஆர்.பழனிவே.ல் தியாகராஜன் கூறியதை வைத்துத்தான் தற்போது காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.