மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக நடந்த விவாதத்தில் தி.மு.க. செய்தித் தொடர்பாளர் சரணவன் சிரித்து கொண்டே இருந்ததது தமிழர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், சரவணனை நெறியாளர் கண்டித்தது அவருக்கு மூக்குடைபட்டதுபோல் ஆகிவிட்டது.
கிறிஸ்தவ மதத்திற்கு மாற மறுப்புத் தெரிவித்து, தற்கொலை செய்துகொண்ட அரியலூர் மாணவி லாவண்யாவின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பா.ஜ.க., ஹிந்து முன்னணி, வி.ஹெச்.பி. உள்ளிட்ட பல்வேறு ஹிந்து அமைப்புகள் லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இன்று வரை களத்தில் நின்று போராடி வருகின்றன. தமிழக ஊடகங்கள் மற்றும் தி.மு.க.வின் ஆசி பெற்ற ஊடகங்கள் அனைத்தும் லாவண்யாவின் மரணத்தை மடைமாற்றும் முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கின்றன. ஆனால், வடநாட்டைச் சேர்ந்த ஊடகங்கள் அனைத்தும் மாணவிக்கு நீதி கேட்டு தொடர்ந்து விவாதங்களை நடத்தி வருகின்றன.
அந்த வகையில், மாணவி லாவண்யா மரணம் தொடர்பாக பிரபல ஊடகமான டைம்ஸ் நவ் ஒரு விவாத நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. சார்பில் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் சரவணன் கலந்துகொண்டார். இவர்தான், நிகழ்ச்சியின்போது சிரித்துக் கொண்டே இருந்தார். இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், கோவத்தையும் ஏற்படுத்தியதோடு, தமிழர்களுக்கு பெரும் தலைகுனிவையும் ஏற்படுத்தியது. இதைக்கண்டு ஆத்திரமடைந்த நெறியாளர் ராகுல் சிவசங்கர், ‘ஒரு உயிர் பறிபோயிருக்கிறது, சிரிக்காதீங்க சரவணன்’ என்று கண்டித்தார். இது சரவணனுக்கு மூக்குடைபட்டதுபோல ஆகிவிட்டது.
மேற்படி சரவணன், நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் நடந்த விவாதத்தின்போது, பொங்கல் பரிசுப் பையில் இருந்த வெல்லம் ஏன் உருகியது என்ற கேள்விக்கு அவர் அளித்த விளக்கம் கவுண்டமணி, செந்தில் காமெடியை மிஞ்சும் வகையில் இருந்ததை யாரும் மறந்திருக்க முடியாது.