தமிழக காவல்துறை உயர் அதிகாரியை அவமதித்த சவுக்கு சங்கர்.
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினரும், மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் மகளுமான கனிமொழியின் தீவிர ஆதரவாளர் என்று பலரால் அழைக்கப்படும் சவுக்கு சங்கர் அவர்கள் தமிழக முதல்வர், பாரதப் பிரதமர் மோடி, மத்திய, மாநில அமைச்சர்கள் மாற்று கட்சியில் உள்ள பெண்கள், என அனைவரையும் மிகவும் தரம் தாழ்ந்த வகையில் இன்று வரை தனது டுவிட்டர் பக்கத்தில் விமர்சனம் செய்து வரும் நபராக இருந்து வருகிறார் என்பது அனைவரின் குற்றச்சாட்டு.
தமிழக காவல்துறை பற்றியும், காவல் துறை உயர் அதிகாரி பற்றியும் மிகவும் கண்ணிய குறைவான முறையில் கனிமொழி ஆதரவாளர் விமர்சனம் செய்து உள்ளார். காவல்துறையை இழிவுப்படுத்திய இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். தி.மு.க அரசு இவர் மீது இப்பொழுதாவது நடவடிக்கை எடுக்க முன்வருமா? என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது.
