தி.மு.க. தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின், தனது கட்சியின் ஐ.டி. விங் நிர்வாகிகளுக்கு பிப்ரவரி 5-ம் தேதி காணொளி வாயிலாக சில அறிவுரைகளை வழங்கி இருக்கிறார். இந்த அறிவுரைதான் கேலிக்கூத்தாகி இருக்கிறது.
அந்த அறிவுரை என்ன தெரியுமா? சாதியைச் சொல்லித் திட்டுவார்கள். மதத்தை வைத்துத் திட்டுவார்கள். பெண்களாக இருந்தால் ஆபாசமாகத் திட்டுவார்கள். நமது குடும்பத்தை இழிவுபடுத்துவார்கள். அதுதான் அவர்களின் பண்பாடு! வாழ்க வசவாளர்கள் என்கிற அடிப்படையில்தான் நாம் செயல்பட வேண்டும். இது நமது பண்பாடு என்று கூறியிருக்கிறார்.
இந்த அறிவுரைதான் பல்வேறு விமர்சனங்களுக்கு வித்திட்டிருக்கிறது. பிரபல நடிகை, சமூக ஆர்வலர், வழக்கறிஞர், எழுத்தாளர் என பன்முகத்தன்மை கொண்ட கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலடி கொடுத்திருக்கிறார். அப்பதிவில், “அதுதான் அவர்களின் பண்பாடு! “- (DK, DMK ஐ சொல்லுகிறாரா, கந்தர்சஷ்டி கவசத்தை, இந்து திருமணங்களை இழிவுபடுத்தும் அவர்கள் சொந்த வழக்கத்தை சொல்லுகிறாரா) எங்கே பார்ப்பான், மாமி, நூல், ஐட்டம், விபச்சாரி என்ற சொற்கள் இல்லாமல் உங்க ஆட்களை பேசச் சொல்லுங்களேன் பார்ப்போம்! வாழ்க_வசவாளர்கள்’ என்கிற அடிப்படையில்தான் நாம் செயல்படவேண்டும்! இதுதான் நமது பண்பாடு” – (அசிங்கமாக பேசும் திக, திமுகவினரை வாழ்த்தி வளர்க்க வேண்டும் என்று சொல்லுகிறாரோ என்னவோ) இதுவரை இதுதான் என் அனுபவம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.
நடிகை கஸ்தூரியின் இப்பதிவை தொடர்ந்து, தி.மு.க.வினர் செய்த அழிச்சாட்டியங்களையும், அடாவடிகளையும் நெட்டிசன்கள் பதிவு செய்து வெளுத்து வாங்கி வருகின்றனர்.