ஸ்டாலினுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைக்கும் வேட்டு; வைரலாகும் காணொளி!

ஸ்டாலினுக்கு போடும் ஓட்டு நமக்கு நாமே வைக்கும் வேட்டு; வைரலாகும் காணொளி!

Share it if you like it

ஆட்சி அமைந்த ஒன்பது மாதங்களுக்குள் தி.மு.க மீது தமிழக மக்களுக்கு கடும் கோவமும், அதிருப்தியும் ஏற்பட்டுள்ளது. விடியல் ஆட்சியின் அவலத்தை சுட்டிக்காட்டும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்வோம். எங்களுக்கு வாக்களியுங்கள் விடியலை நாங்கள் தருகிறோம் என தி.மு.க தலைவர் ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி என தி.மு.க-வை சேர்ந்த மூத்த தலைவர்கள் தமிழக மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகள் அளித்து ஆட்சி கட்டிலில் அமர்ந்தனர்.

ஆட்சியில் அமர்ந்து ஒன்பது மாதங்களை கடந்து விட்ட நிலையில், தி.மு.க மீது தமிழக மக்களுக்கு சொல்லோண்ணா கோவமும், அதிருப்தியும் ஏற்பட்டு உள்ளது. எதிர்வருகின்ற உள்ளாட்சி தேர்தலில் தோல்வி முகத்தில் உள்ள தி.மு.க, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் நோக்கில் அப்பாவி மக்களிடம் பணம், பரிசு பொருட்கள், ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி அவர்களின் மூளையை கழுவி வருகிறது. அந்த வகையில், விடியல் ஆட்சியின் அவலத்தை சுட்டிக்காட்டும் காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அறிவார்ந்த தமிழக மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்பதே இக்காணொளியின் உட்கருத்து ஆகும்.

Image
Image

Share it if you like it