பிரபல திரைப்பட இயக்குனரும், அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான டி. ராஜேந்திரன், டாஸ்மாக் கடைகளை மூடாத தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி அவர் பேசிய காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மதுக்கடைகளை உடனே, மூடுவோம் எங்கள் கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று தி.மு.க தலைவர் ஸ்டாலின், எம்பி கனிமொழி, இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், உட்பட பலர் தேர்தல் சமயத்தில் தமிழக மக்களுக்கு உறுதியான வாக்குறுதிகளை அளித்து இருந்தனர். கொடுத்து இருந்தனர்.
பெண்கள், சமூக ஆர்வலர்கள், என பலர் தி.மு.க-வின் வாக்குறுதியை நம்பி அக்கட்சியை ஆட்சியில் அமர்த்தினர். ஆனால் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு தமிழக மக்களின் முகத்தில் கரியை பூசியதற்கு இன்று வரை கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்து வரும் சூழலில், பிரபல திரைப்பட இயக்குனரும், அனைத்திந்திய லட்சிய திராவிட முன்னேற்றக் கழக தலைவருமான டி. ராஜேந்திரன், டாஸ்மாக் கடைகளை மூடாத தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
டாஸ்மாக் வருவாய் 11% அதிகரிப்பு தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் – நவம்பர் வரை வருவாய் – ரூ.19,000 கோடி 2021ஆம் ஆண்டு ஏப்ரல் – நவம்பர் வரை வருவாய் – ரூ.21,000 கோடி – வருவாய் வந்து உள்ளது என சமீபத்தில் தான் டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.