விருதுநகரில் பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி குறித்து வாய் திறக்காத திருமாவிற்கு குவிந்து வரும் கண்டனங்கள்.
தி.மு.க ஆட்சி தமிழகத்தில் அமைந்த பின்பு பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தொடர்கதையாக இருந்து வருகிறது. பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மட்டுமே, ஆளும் கட்சியில் நடக்கும் அவலங்களை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகின்றன. ஆனால், உண்மையான சமூக சேவகர்கள், என்று தங்களை அழைத்துக் கொள்ளும் வி.சி.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் கப்சிப். அரசியல் ஆதாயத்திற்காக, ஸ்டாலின் ஆட்சியில் நடக்கும், அட்டூழியங்களை தட்டிக் கேட்க மனம் இல்லாமல், இன்று வரை கள்ள மெளனம் காத்து வருகின்றனர் என்பது அனைவரின் கருத்து.
அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த இளம் பெண் அகல்யா-22 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை தான், தி.மு.க.வை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் நான்கு பள்ளி மாணவர்கள் உட்பட எட்டு பேர் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். தி.மு.க.வை சேர்ந்த ஹரிஹரன் என்பவன் அகல்யாவிடம் முதலில் நட்பாக பழகியுள்ளான். அதன் பின்பு, நட்பு காதலாக மாறியதாக சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, அகல்யாவை தனிமையான இடத்திற்கு அழைத்துச் சென்று, தன்னுடன் உடலுறவு கொள்ள வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், தனது செல்போனில் இக்காட்சிகளை பதிவு செய்து, மற்ற நண்பர்களுக்கும் அனுப்பியுள்ளான்.
அதன்படி, இக்காணொளியை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம், என மிரட்டி ஜுனைத் அகமது (27), பிரவீன் (21), மாடசாமி (37) மற்றும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்கள், பலமுறை அகல்யாவை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து உள்ளனர். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது. ஹரிஹரன் மற்றும் ஜூனைத் ஆகியோர் மாவட்ட தி.மு.க இளைஞரணி நிர்வாகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியல் சமூக மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்பது, என கட்சி என்று ஊர் முழுக்க பிரச்சாரம் செய்து வரும் திருமாவளவன். இன்று வரை அகல்யாவிற்கு ஏன்? குரல் (போராட்டம்) கொடுக்கவில்லை என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அதே போல, கடந்த ஆண்டு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில், தி.மு.க.வை எதிர்த்து பட்டியல் சமூகத்தை சேர்ந்த பெண் ஒருவர் போட்டியிட்டார். இதனை பொறுத்துக் கொள்ள முடியாத தி.மு.க.வினர், உயர்ந்த ஜாதியான எங்களை எதிர்த்து நீ போட்டியிடுவதா? என்று அப்பெண்மணியின் ஜாக்கெட்டை கிழித்தும், அருவருக்கதக்க வகையில் அவரின் குடும்பத்தை விமர்சனம் செய்து இருந்தனர். அப்பொழுதும், தோழமை சுட்டுதலை மறந்து கள்ள மெளனம் காத்தவர் இதே திருமா என்பது குறிப்பிடத்தக்கது.