பாரத பிரதமர் மோடிக்கு பாராட்டு… இம்ரானுக்கு திடீரென பிறந்த ஞானோதயம்!

பாரத பிரதமர் மோடிக்கு பாராட்டு… இம்ரானுக்கு திடீரென பிறந்த ஞானோதயம்!

Share it if you like it

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு திடீரென ஞானோதயம் பிறந்துவிட்டதாக கூறுகின்றனர் நெட்டிசன்கள். ஏனெனில், சமீபகாலமாக அவர் உண்மைகளை மட்டுமே பேசிவருவதுதான் காரணம் என்கிறார்கள்.

பிரபல கிரிக்கெட் வீரரான இம்ரான் கான் ஓய்வுபெற்ற பிறகு, 1996-ல் பாகிஸ்தான் தெஹ்ரிக்-இ-இன்சாப் என்கிற கட்சியைத் தொடங்கினார். படிப்படியாக முன்னேறிய இவரது கட்சி 2018 தேர்தலில் ஆட்சியைப் பிடித்தது. இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமரானார். ஆனால், இம்ரான் கான் ஆட்சியில் தீவிரவாதம் அதிகரித்திருப்பதோடு, நாடும் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதனால், எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து இம்ரான் கானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி இருக்கின்றன. மேலும், இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வரவும் முடிவு செய்திருக்கின்றன. இது ஒருபுறம் இருக்க, பாகிஸ்தான் ராணுவமும் இம்ரான் கான் பதவி விலகக் கோரி கெடு விதித்திருக்கிறது.

இந்த நிலையில்தான், சமீபகாலமாக பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொண்டுவரும் இம்ரான் கான் பல உண்மைகளை பேசி, இதர நாட்டுத் தலைவர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். குறிப்பாக, பாகிஸ்தான் ராணுவம் தனக்கு நெருக்கடி கொடுத்து வருவதால், தனது கட்சிப் பேரணியில் கலந்துகொண்ட இம்ரான் கான், “இந்திய ராணுவத்தில் ஊழல்கள் இல்லை. இதனால், அந்நாட்டு ராணுவம் இந்திய அரசாங்கத்தில் தலையிடுவதில்லை. அந்நாட்டின் பிரதமர் சொல்வதை கேட்டு நடக்கிறது. பாகிஸ்தானை விட இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சிறந்தது. இந்தியாவின் வெளியுறவுக்குக் கொள்கை அந்நாட்டு மக்களுக்கானதாக இருக்கிறது. இதனால்தான் குவாட் கூட்டணியில் இந்தியா இருந்தாலும், அமெரிக்காவால் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்க முடிகிறது. ஆகவே, இந்தியாவை நான் வணங்குகிறேன்” என்று மோடியை பாராட்டினார்.

அதேபோல, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு தற்போது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில், பேசிய இம்ரான் கான், இஸ்லாம், இஸ்லாமிய மக்கள் மீதான அச்சம் உலக நாடுகள் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். அதாவது, “கிரிக்கெட் வீரராக நான் பல்வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கிறேன். அப்போதெல்லாம் அந்த நாடுகளில், இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்போ, பயமோ அந்நாட்டு மக்களிடம் இருந்ததில்லை. ஆனால், 2001 செப்டம்பர் 11-ம் தேதி அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கிலுள்ள இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு உலகளவில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான பயம் அதிகரித்திருக்கிறது. இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் இணைத்தும், இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாகவும் பார்க்கின்றனர்” என்று உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆகவே, ஆட்சி போகப்போகிறது என்கிற பயத்தில் இம்ரான் கானுக்கு திடீரென ஞானோதயம் பிறந்து விட்டது. அதுதான் உண்மையை பகிரங்கமாக ஒப்புக்கொண்டு வருகிறார் என்று கூறிவிருக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். வருகிற மார்ச் 28-ம் தேதி இம்ரான் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it