நீட் தேர்வு விலக்கு குறித்து தி.மு.க மூத்த தலைவர் கருத்து.
ஏழை மாணவர்களின் நலன், மற்றும் கல்வியாளர்களிடம் இருந்து, கிடைக்கப்பெற்ற ஆலோசனையை தொடர்ந்தே. மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அரசு பள்ளி மாணவர்களே நீட் தேர்வு குறித்து அச்சம் கொள்ளாமல், சாதனைக்கு மேல் சாதனை புரிந்து வருகின்றனர். ஆனால் இதனை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை, சேர்ந்த தோழர்கள் நீட் தேர்விற்கு, தங்களது கடும் எதிர்ப்பினை இன்று வரை தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், எம்பிகள் மற்றும் தி.மு.க கூட்டணியில் உள்ளவர்கள். பணம் படைத்த முதலைகள் என, பலர் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிக்களுக்கு, நீட் தேர்வு பெரும் தடையாக, இருப்பதால் தான் இந்த அளவிற்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுகிறது என்பது அனைவரின் கருத்து.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், முதல் கையெழுத்திலேயே நீட் தேர்வை, ரத்து செய்வோம் என்று கூறிய ஸ்டாலின். நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம், எனக்கு தெரியும் என்று கூறி கொஞ்சமாவது, வெட்கம், மானம், சூடு, சொரணை, இருக்க வேண்டும் என்று முந்தைய ஆட்சியாளர்களை மிக கடுமையாக விமர்சனம் செய்த உதயநிதி ஸ்டாலினே, கள்ள மெளனமாக இருந்து வரும் சூழலில், தி.மு.க மூத்த தலைவர் டி.ஆர். பாலு தமிழக ஆளுநர் பதவி விலக வேண்டும் என்று கூறியிருப்பது தமிழக மக்களிடையே கடும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
/https://www.facebook.com/watch/?v=342775677367367