நீட் தேர்வை ரத்த செய்ய கோரி தி.மு.க எம்பிகள் எதிர்ப்பு.
மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, மத்திய அரசு நீட் தேர்வினை நடைமுறைக்கு கொண்டு வந்தது. ஆனால் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்த தோழர்கள் தொடர்ந்து நீட் தேர்விற்கு தங்களது கடும் எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
ஆளும் கட்சியை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், மற்றும் பணம் படைத்த முதலைகள் நடத்தி வரும் மருத்துவ கல்லூரிக்களுக்கு நீட் தேர்வு பெரும் தடையாக உள்ளது என்பதே உண்மை. அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் வெற்றி பெற்று தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றனர். மாணவர்களே தைரியமாக இருந்து வரும் சூழலில், திமு.க ஆசி பெற்ற சில்லறை போராளிகள், நெறியாளர்கள், ஊடகவியலாளர்கள், தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக தவறான பிரச்சாரத்தை இன்று வரை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீட் தேர்வை ரத்த செய்ய கோரி நாடாளுமன்றத்தில் தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தி உள்ளனர். தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்பு, நீட் தேர்வை உடனே ரத்து செய்வோம், என்று பேசிய உதயநிதி ஸ்டாலின் அவர்களின் காணொளி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.