போலீஸ் எல்லாம் எங்கள் ‘டே—ஷு’க்கு சமம்! வி.சி.க. நிர்வாகி திமிர் பேச்சு

போலீஸ் எல்லாம் எங்கள் ‘டே—ஷு’க்கு சமம்! வி.சி.க. நிர்வாகி திமிர் பேச்சு

Share it if you like it

‘நாங்களெல்லாம் ராவான ரவுடிகள். எங்களுக்கெல்லாம் போலீஸ் மயிருக்கு சமம். எங்களை எதுவும் செய்ய முடியாது’ என்று தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் வி.சி.க. நிர்வாகி திமிராக பேசிருப்பது காவல்துறை மட்டுமல்லாது பொதுமக்கள் மத்தியிலும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

‘நான் ஆட்சிக்கு வந்தால் சிறந்த நிர்வாகத்தை மக்களுக்கு வழங்குவேன். சட்டம், ஒழுங்கை சிறந்த முறையில் பேணி காப்பேன். தி.மு.க.வுக்கு வாக்களியுங்கள்’ என்று அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தின்போது தமிழக மக்களுக்கு வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அரசு அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் எவ்வாறு மரியாதை தருகிறார்கள் என்பதை தமிழக மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தி.மு.க.வினரையும் மிஞ்சும் வகையில் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்தவர்கள் செய்யும் அட்டகாசம் தாங்க முடியவில்லை.

குறிப்பாக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆடாத ஆட்டம் இல்லை. போலீஸாரை வாடா போடா என்று ஒருமையில் பேசுவதும், நான் யார் தெரியுமா? முடிஞ்சா என் மேல கையை வச்சுப் பாரு என்று எகிறுவதும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நடந்து கொண்டே இருக்கிறது. இதை தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பலமுறை சுட்டிக் காட்டி இருக்கிறார். தமிழக காவல்துறை, டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கையில் இல்லை. தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு மோசமாகிக் கொண்டே செல்கிறது என்று சமீபத்தில் கடுமையான விமர்சனத்தை முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அண்ணாமலை சொன்னதை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆம், தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகி ஒருவர், ‘நாங்களெல்லாம் பெரிய ரவுடிகள். போலீஸெல்லாம் எங்கள் மயிருக்குச் சமம். எங்களை ஒன்றும் செய்ய முடியாது’ என்று திமிராக பேசியிருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பொதுமக்கள் தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். அதேபோல, பொங்கல் பரிசு தரமானதாக இல்லை என்று சொன்னதற்காக அப்பாவி தமிழக மக்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வைத்த தி.மு.க. அரசு, காவல்துறையினரையே மயிரு என்று சொன்ன வி.சி.க. நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஒரு வேளை கூட்டணிக் கட்சி என்பதால் கண்டும் காணாமல் விட்டு விடுவோம் என்று விட்டு விட்டார்களோ என்கிற சந்தேகமும் பொதுமக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.


Share it if you like it