5 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் பையை தமிழக அரசு 60 ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறித்த காணொளி ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பிளாஸ்டிக் பொருட்களின் ஆதிக்கத்தை முற்றிலும் குறைக்கவும், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மீண்டும் மஞ்சள் பை திட்டம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் மிக பிரமாண்டமான முறையில் தொடங்கி வைத்தார். மேலும், ஜெர்மன் நாட்டு அமைப்புடன் இணைந்து “மஞ்சள் பை” பிரசாரம் மேற்கொள்ளப்படும் என்றும் தி.மு.க. அரசு பெருமையோடு அறிவித்தது.
அந்த வகையில், பொங்கல் பரிசுத் தொகுப்பை ’மஞ்சள் பையில்’ தமிழக அரசு வழங்கும் என்று அனைத்துத் தரப்பு மக்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், சுற்றுசூழலுக்கு தீங்கிழைக்கும் வகையில், உருகும் வெல்லத்தை பிளாஸ்டிக் பையில் வழங்கி, தமிழக மக்களின் கடும் கோவத்தை சம்பாரித்தது.
இந்த நிலையில், தமிழக அரசு வழங்கிய ’மஞ்சள் பை’ திட்டத்தில் 130 கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பதாக தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டை சமீபத்தில் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் அடங்குவதற்குள், 5 ரூபாய் மதிப்புள்ள மஞ்சள் பையை தமிழக அரசு 60 ரூபாய்க்கு வாங்கி இருக்கிறது. இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என்று பொதுமக்களிடம் கேள்வி எழுப்பிய காணொளி ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைக்கண்டுதான் மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துபோய் இருக்கிறார்கள்.