பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் கோவிலை அவமதித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் கோவிலை அவமதித்த தமிழக முதல்வர் ஸ்டாலின்..!

Share it if you like it

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஐயா-வின் குரு பூஜை இன்று பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள தேவர் நினைவிடத்தில் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரப்படுகிறது. அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் வந்து மரியாதை செய்துவிட்டு சென்று கொண்டு இருக்கின்றனர். திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடத்தில் மலர் வலையம் வைத்து மரியாதை செய்தார், அப்பொழுது அங்கு வழங்கப்படும் விபூதியை ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளாமல் அவமதித்த செயல் தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், கொதிப்பையும், ஏற்படுத்தியுள்ளது.

தன்னை கடவுள் மறுப்பாளராக வெளிப்படுத்தும் ஸ்டாலின், இஸ்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு குல்லா அணிந்து கொள்வதும். கிறிஸ்துவ நிகழ்ச்சிகளில் பங்கேற்று கேக் உண்பதையுமே இன்று வரை வழக்கமாக கொண்டவர். ஆனால் ஸ்ரீரங்கம் கோவிலில் தனது நெற்றியில் வைக்கப்பட்ட சந்தனத்தை உடனே அழித்து தனது ஹிந்து விரோத போக்கை காட்டியவர் ஸ்டாலின் என்பது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் பசும்பொன் தேவர் நினைவிடத்தில் வழங்கப்படும் விபூதியை ஏற்றுக்கொள்ளாமல் தனது வன்மத்தை மீண்டும் ஒருமுறை ஸ்டாலின் காட்டி உள்ளார். இதே போன்றே கடந்த முறையும் ஸ்டாலின் நடந்து கொண்டார் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தி.மு.க தொடர்ந்து ஹிந்து மக்களை அவமதித்து வருகிறது என்பதற்கு இதுவே மிகச் சிறந்த சான்று என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது. .


Share it if you like it