தி.மு.க ஆட்சிக்கு வந்த உடன் முதல் உத்தரவே பூரண மதுவிலக்கு சட்டம் கொண்டு வரப்படும் என்று ஆட்சிக்கு வருவதற்கு முன்பு முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தற்பொழுது தமிழக மக்களை இருளில் தள்ளியுள்ள விடியல் தலைவருமான ஸ்டாலின் முன்பு கூறி இருந்தார் என்பது யாரும் மறுக்க முடியாது.
இந்நிலையில் தி.மு.க கூட்டணியில் உள்ள வி.சி.க தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு கருத்து பதிவு செய்து உள்ளார்.
மதுவிலக்கைத் தேசியக் கொள்கையாக இந்திய ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும். காந்தி பிறந்தநாள்- காமராஜர் நினைவுநாளான இன்று செய்தியாளர் சந்திப்பில் விசிக சார்பில் கோரிக்கை விடுத்தேன். அத்துடன், கல்வியை ஒத்திசைவு பட்டியலிலிருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டுமெனவும் வலியுறுத்தினேன்.
இன்று வரை ஏன்? மதுவிலக்கை தமிழகத்தில் கொண்டு வரவில்லை என்று கூட்டணி கட்சி தலைவர் ஸ்டாலினை கேள்வி கேட்காமல், வழக்கம் போல மக்களின் கவனத்தை திசை திருப்பும் வகையில் மதுவிலக்கு குறித்து மோடி அரசிடம் கோரிக்கை வைத்து உள்ளார் திருமா. தொடர்ந்து இது போன்று கம்பி கட்டும் கதைகளை பேசி வரும் வி.சி.க தலைவரின் உண்மையான சுயரூபத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.