அடப்பாவிகளா… தி.மு.க.வின் வெற்றி ரகசியம் இதுதானா?!

அடப்பாவிகளா… தி.மு.க.வின் வெற்றி ரகசியம் இதுதானா?!

Share it if you like it

அரசியல் அழுத்தம் காரணமாகவே, தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றதாக மாற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி ஐகோர்ட்டில் தெரிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து, ஓகோ… தி.மு.க.வின் வெற்றி ரகசியம் இதுதானா என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழகத்தில் தி.மு.க. எப்போதெல்லாம் ஆட்சி அதிகாரத்துக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் அராஜகங்கள் தலைதூக்கும், அதிகாரிகள் மற்றும் போலீஸார் மிரட்டப்படுவார்கள் என்கிற குற்றச்சாட்டு பரவலாக இருந்து வருகிறது. இந்த நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று தி.மு.க. மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி இருக்கிறது. இதன் பிறகு, தி.மு.க.வினரின் அராஜகம் எப்படியெல்லாம் இருக்கிறது என்பதை, சமூக வலைத்தளங்களில் வெளியாகிவரும் வீடியோக்கள் மூலம் நாம் அறிந்துகொள்ளலாம். குறிப்பாக, போலீஸார் எவ்வாறெல்லாம் மிரட்டி உருட்டப்படுகிறார்கள், அவமானப்படுத்தப்படுகிறார்கள் என்பதை, நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின்போது கண்கூடாகவே காண முடிந்தது.

இந்த நிலையில்தான், தேர்தலில் பணியாற்றிய அதிகாரிகளை மிரட்டி, தாங்கள் வெற்றிபெற்றதாக அறிவிக்க வைத்திருக்கும் அதிர்ச்சித் தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு பிப்ரவரி 19-ம் தேதி நடந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 22-ம் தேதி நடந்தது. இத்தேர்தலில் தி.மு.க. அமோக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் மொத்தமுள்ள 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றிய தி.மு.க., நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் ஒருசிலவற்றைத் தவிர மற்ற அனைத்து இடங்களில் வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால், இந்த வெற்றி எப்படிக் கிடைத்தது என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது. தேர்தல் அதிகாரிகளை மிரட்டி வெற்றிபெற்றதாக அறிவிக்கச் செய்திருக்கிறார்கள். இது கோர்ட் மூலம் தற்போது அம்பலமாகி இருக்கிறது.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பேரூராட்சிக்கும் தேர்தல் நடந்தது. இதில், 10-வது வார்டில் தி.மு.க. சார்பில் சுப்புலட்சுமியும், சுயேட்சையாக பழனிச்செல்வியும் போட்டியிட்டனர். இதற்கான வாக்கு எண்ணிக்கை 22-ம் தேதி நடந்தது. அப்போது, இருவருமே தலா 284 வாக்குகளை பெற்றிருந்தனர். இதையடுத்து, வெற்றிபெற்றவரை குலுக்கல் முறையில் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. இதில், பழனிச்செல்வி வெற்றிபெற்றதாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், திடீரென முடிவை மாற்றி தி.மு.க. வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

எனவே, தேர்தல் அதிகாரியின் உத்தரவை ரத்து செய்து, தான் வெற்றிபெற்றதாக அறிவிக்க வேண்டும் என்று கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் பழனிச்செல்வி. இந்த வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் பெஞ்ச் விசாரித்தது. அப்போது, குலுக்கலின்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சிகளை ஆராய்ந்ததில், தேர்தல் முடிவை அதிகாரி மாற்றி அறிவித்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக தேர்தல் அதிகாரி நேரில் ஆஜராகும்படி உத்தரவிட்டிருந்தனர்.

அதன்படி, வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், அரசியல் அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றி அறிவித்ததாக தேர்தல் அதிகாரி தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம்தான் தற்போது சூடுபிடித்திருக்கிறது. அப்படியென்றால், தமிழகம் முழுவதும் தி.மு.க. இப்படித்தான் வெற்றிபெற்றதா என்கிற விமர்சனம் எழுந்திருக்கிறது. நெட்டிசன்களும் ஓகோ… இதுதான் தி.மு.க. வெற்றியின் ரகசியமா என்று கிண்டலடித்து வருகின்றனர்.


Share it if you like it