நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகள் பதிவிட்ட திமுக, அதிரடியாக நீக்கிய பேஸ்புக் !

நீட் தேர்வுக்கு எதிரான கருத்துகள் பதிவிட்ட திமுக, அதிரடியாக நீக்கிய பேஸ்புக் !

Share it if you like it

நீட் தேர்வுக்கு எதிராக நீட் விலக்கு நமது இலக்கு என்ற பெயரில் தி.மு.க.வினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாக கட்சி தொண்டர்கள் வெளியிடும் பதிவுகளை முகநூல் பக்கத்தில் இருந்து நீக்கி வருவதாக தி.மு.க.வினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். சமூக ஊடக தளத்திற்கு எதிராகச் செல்வதாகக் கூறப்படும் பல பதிவுகள், ‘BAN NEET ‘ என்ற ஹேஷ்டேக்கைக் கொண்ட பதிவுகள் பெருமளவில் நீக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. திமுக மாநில துணை அமைப்பு செயலாளரான எஸ்.ஆஸ்டின் தனது முகநூல் பதிவு நீக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வுக்காக 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நவம்பர் 3 ஆம் வாரத்திலிருந்து பயிற்சி வகுப்புகள் தொடங்கும் என தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த 420 மையங்களும் கண்டறியப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் கூறப்பட்டது.

நீட் தேர்வுக்கு ஒருபுறம் மாணவர்கள் ஆயத்தமாக, மறுபுறம் திமுக அரசு ‘BAN NEET ‘ என்று மாணவர்களை ஏன் திசை திருப்புகிறது. இவர்கள் அரசியல் நடத்த மாணவர்கள் தான் கிடைத்தார்களா ? இவ்வாறு சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it