பா.ஜ.க.,வின் கொள்கைகளுடன் நாம் தமிழர் கட்சி சீமான் செயல்படுவதாக திமுக விமர்சித்து வருகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சி கூட்டத்தில் சீமான் மேடை நாகரீகமின்றி திமுகவை செருப்பால் அடிப்பேன் என்று செருப்பை தூக்கி காட்டினார். இதற்கு திமுகவினர் தங்கள் கடும் எதிர்ப்பினை சமூக வலைதளங்களில் சீமானுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் கட்சியை சேர்ந்தவர்கள் எங்கு கூட்டம் போட்டு பேசினாலும் செருப்பால் அடிப்போம் என கூறிவந்த நிலையில் தர்மபுரி மாவட்டம், அரூர் தொகுதி, மொரப்பூரில் நாம் தமிழர் கட்சியினர் நேற்று (டிச., 21) நடத்திய பொதுக்கூட்டத்தின் போது, அக்கட்சியின் மாநில பேச்சாளர் ஹிம்லர் என்பவர் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திமுக நிர்வாகி ஒருவர் மேடையில் ஏறி தகராறில் ஈடுப்பட்டு, பேசி கொண்டு இருந்தவரை அடிக்கப் பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

