திமுகவின் ஆர்.எஸ் பாரதியை ஹிந்தியில் கழுவி ஊத்திய நாகா அமைச்சர் !

திமுகவின் ஆர்.எஸ் பாரதியை ஹிந்தியில் கழுவி ஊத்திய நாகா அமைச்சர் !

Share it if you like it

சமீபத்தில் சென்னையில் திமுக சார்பில் நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு விழாவில், அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி பங்கேற்று பேசினார். அதில் பேசிய அவர், நாகா இனமக்கள் நாய்கறி உண்பவர்கள் அவர்களே இந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை ஓட ஓட விரட்டியுள்ள நிலையில், உப்பிட்டு சோறு சாப்பிடும் நாம் என்ன செய்யவேண்டும் என்பது குறித்து யோசிக்கவேண்டும் எனப் பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தனது எக்ஸ் பதிவு மூலம் கண்டனம் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில், ‘ நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது. மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என திரு. பாரதியை வலியுறுத்துகிறேன் என ஆளுநர் ரவி தெரிவித்தார்.

இந்நிலையில் நாகலாந்து உயர்கல்வித்துறை அமைச்சரான டெம்ஜென் இம்னா அலோங் ஆர்.எஸ் பாரதிக்கு பதிலடி தரம் வகையில் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், மாண்புமிகு திரு ஆர்.எஸ்.பாரதி ஜி, உங்கள் பெயரில் ‘பாரதம்’ இருந்தபோதிலும், ஒட்டுமொத்த இந்தியாவே பெருமைப்படும் ஒரு சமூகத்தை அவமதித்து காயப்படுத்த முயற்சித்தது மிகவும் வருத்தமளிக்கிறது. இந்திய கூட்டணி மக்களே, தயவுசெய்து உங்கள் வார்த்தைகளை கட்டுப்படுத்துங்கள். எங்களைப் பற்றியும், எமது கலாச்சாரத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்ள எப்போதாவது வடகிழக்கிற்கு வாருங்கள். எங்கள் உணர்வுகளை புண்படுத்தாதீர்கள். எமது வடகிழக்கு மக்கள் ஒன்றிணைந்து எமது வாழ்வாதாரம் குறித்து அவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என நான் கேட்டுக்கொள்கின்றேன். அச்சச்சோ மன்னிக்கவும், உங்களால் இந்தி படிக்க முடியாது என்று கூறி இதே கருத்தை ஆங்கிலத்திலும் பதிவிட்டுள்ளார். இந்த பதிவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பகிர்ந்துள்ளார்.


Share it if you like it