Share it if you like it
உத்தரபிரதேச மாநிலம் லாக்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குளங்கள், உள்ளிட்ட நீர் நிலைகளை பாதுகாப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைதார்.டால்பினை உத்தரபிரதேசத்தின் மாநில கடல் வாழ் விலங்காக அறிவித்த அவர், டால்பின்கள் கங்கை, சம்பல், கோக்ரா, யமுனை, ராப்தி, கெருவா போன்ற நதிகளில் காணப்படுவதாகவும் அவற்றின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு உத்தரபிரதேசத்தில் இரண்டாயிரம் வரை உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கடல் வாழ் உயிரினங்களுக்கு தீங்கிழைக்கும் பிளாஸ்டிக் பொருள்களை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் தவிர்க்க வேண்டும் என்றும் யோகி ஆதித்யநாத் கேட்டுக்கொண்டார்.
Share it if you like it