உயர்கல்வி குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தென் தமிழக மாநில இணை செயலாளர் J.D. விஜயராகவன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :-
அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) தேசிய மாணவர் அமைப்பு நாடு முழுவதும் பல்வேறு விதமான சேவை பணிகள் மற்றும் கல்வி தொடர்பான சந்தேகங்கள் குறித்து ஆலோசனை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவந்த நிலையில் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தை சிறந்த முறையில் தேர்வு செய்ய உயர்கல்வி குறித்த சந்தேகங்கள் ஏற்படும். ஆகவே உயர்கல்வியில் என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம் போன்ற சந்தேகங்களுக்கு ABVP தேசிய மாணவர் அமைப்பு மதுரை மண்டல அளவிலான உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
உதவி எண்கள் விவரம் :
மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் : 7904345452
காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகம் : 8610933722
மதுரை : 6385692314
திண்டுக்கல் : 8610933722
தேனி : 8300312833
விருதுநகர் : 6379535771
மாணவர்கள் இந்த உதவி எண்களுக்கு தொடர்புகொண்டு உயர்கல்வி குறித்த தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டறிந்து சிறந்த துறைகளை தேர்வு செய்ய இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு ABVP தேசிய மாணவர் அமைப்பு சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இச்செய்தியை தங்களது மேலான பத்திரிக்கையில் பிரசுரிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு : 8300312833
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.