தனது ஆதங்கத்தை வெளிப்படுத்திய ரஹ்மானுக்கு கனிவான முறையில் பதில் புதுவை ஆளுநர் பதில் அளித்து இருப்பதை பலர் வரவேற்று இருக்கின்றனர்.
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவரும் தெலுங்கானா மற்றும் புதுவை ஆளுநராக இருப்பவர் தமிழிசை சவுந்தரராஜன். இவர், சிறந்த எழுத்தாற்றல், பேச்சாற்றல் கொண்டவர். இதுதவிர, அனைவரிடமும் அன்புடனும், கனிவுடனும் பேசக் கூடியவர். இதனிடையே, புதுவை யூனியன் பிரதேசத்தை சேர்ந்தவர் ரஹ்மான். இவர், புதிய தலைமுறை ஊடகத்தில் பணியாற்றி வருகிறார். இவர், தனது ட்விட்டர் பதிவில், புதுச்சேரியின் அடையாளச் சின்னமான பாரதி பூங்காவில் உள்ள ஆயிமண்டபம் அருகே குவிந்துள்ள குப்பைகள் நகராட்சி நிர்வாகத்தின அலட்சியம். வரலாற்றுச் சின்னத்திற்கு அவமானம் என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இதற்கு, புதுவை ஆளுநர் தமிழிசை, பாரதி பூங்கா சுத்தம் செய்யப்பட்டுள்ளது. சுத்தம் செய்த மாநகராட்சி பணியாளர்களுக்கு நன்றி. “தூய்மை புதுச்சேரி தான் எனது வேண்டுகோள்” ஆகவே பொது இடங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள மக்கள ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கவனத்திற்கு கொண்டு வந்த சகோதரருக்கு நன்றி என கனிவுடன் பதில் அளித்து இருக்கிறார்.