11 மணிக்கு முதல்வராக தளபதி பதவியேற்றுக் கொண்டால், 11.05-க்கு மாட்டு வண்டியை நீங்களே ஆற்றுக்கு ஓட்டுங்க. எந்த அதிகாரியும் தடுக்க மாட்டான்; தடுத்தா எனக்கு போன் போடுங்க; அந்த அதிகாரி அங்க இருக்க மாட்டான் என்று தி.மு.க சார்பில் கரூரில் போட்டியிடும் ’செந்தில் பாலாஜி’ அண்மையில் கூறியிருந்தது தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக அண்ணாமலையை பா.ஜ.க களத்தில் இறக்கியுள்ளது. இவரை எதிர்த்து போட்டியிட பயந்து தற்பொழுது கரூரில் போட்டியிடுகிறார். தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜி என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாக உள்ளது.
அரவக்குறிச்சிக்கு உட்பட்ட புன்னம் சத்ரம் பகுதியின் அருகில் அண்ணாமலை அவர்கள் சமீபத்தில் பிரச்சாரம் செய்ய சென்ற பொழுது. பா.ஜ.க பிரச்சார வாகனத்தின் ஓட்டுநரான பாலமுருகன் மற்றும் அவருடன் இருந்த கார்த்தி என்பவரையும். தி.மு.க வேட்பாளர் செந்தில் பாலாஜியின், தூண்டுதல் பெயரில் மிக கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இதற்கு அண்ணாமலை அவர்கள்., செந்தில் பாலாஜியின் அடாவடித்தனத்தையும், குண்டர்களை ஏவி பாஜக-வினர் மீது தாக்குதல் நடத்தியவர்களையும் மிக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார்.
இதனை பொறுத்துக் கொள்ள முடியாத, கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி அவர்கள். செந்தில் பாலாஜியை விமர்சனம், செய்ததை மிக கடுமையாக கண்டித்து உள்ளார். 11.05 -க்கு ஆற்றில் மணல் அள்ளலாம் என்று கூறியதற்கு கண்டனம் இல்லை. அப்பாவி பா.ஜ.க ஓட்டுனர் தாக்கப்பட்ட பொழுது கண்டனம் இல்லை. செந்தில் பாலாஜியை விமர்சனம் செய்ததற்கு. அண்ணாமலை மீது நாடக குயின் பாய்ந்து இருப்பது ஏன்? என்று நெட்டிசன்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.