வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளி இடத்தில், கட்டுமான பணிக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக இந்து முன்னணி குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் தளத்தில்.
வள்ளலார் பெருவெளி இடத்தை தொல்லியல் துறை ஆய்வு செய்ததில் 17-ம் மற்றும் 18-ம் நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட மதில் சுவர் இருப்பதாக ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில் வடலூர் வள்ளலார் சத்திய ஞானசபை பெருவெளி இடத்தில் கட்டுமான பணி தொடரக்கூடாது, கட்டுமான பணிக்கு தடை விதிக்க வேண்டுமென சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மனுவை ஏற்றுக் கொண்ட உயர் நீதிமன்ற நீதிபதி அவர்கள், வள்ளலார் பெரு வெளி இடத்தில் கட்டிடப் பணிகள் தொடரக்கூடாது என்றும் வள்ளலார் பெருவெளி இடத்தை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை தொல்லியல் துறை வசமே ஒப்படைக்க வேண்டுமென்றும், மேலும் தொல்லியல் துறை மூன்று பேர் கொண்ட குழு அமைத்து புராதான கட்டிடங்கள் இருக்கும் பட்சத்தில் அதைப் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அதனுடைய ஆய்வறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதி அரசர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது…
இது மக்கள் மற்றும் இந்து முன்னணி தொடர் போராட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்.
சனாதானத்தின் வாழ்வுதனை திராவிட மாடல் சூது கவ்வியது…… மறுபடியும் நீதிமன்ற தடை உத்தரவு மூலம் சனாதனமே வென்றது….இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.