அரசு பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு !

அரசு பெண் ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு !

Share it if you like it

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பெண் ஊழியர்கள் சேலை அல்லது ‘துப்பட்டாவுடன்’ கூடிய சுடிதார் மட்டுமே அணிய வேண்டும் என ஆடை கட்டுப்பாடு விதித்து மாவட்ட ஆட்சியர் விடுத்துள்ள அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “கன்னியாகுமரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் பணிபுரியும் அனைத்து ஜீப்பு ஓட்டுநர்கள் அலுவலக பணி நேரத்தில் வெள்ளை சட்டை, காக்கி நீளக்கால் சட்டை அணியவும் மற்றும் அலுவலக உதவியாளர்கள் ஆண்கள் வெள்ளை சட்டை, வெள்ளை நீளக்கால் சட்டையும் பெண்கள் மெரூன் கலர் சேலை அல்லது மெரூன் கலர் ‘துப்பட்டாவுடன்’ கூடிய சுடிதார் அணிந்து பணி செய்ய வேண்டும் (லெக்கின்ஸ் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்) எனவும் இதனை சம்மந்தப்பட்ட அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.


Share it if you like it