ஜனாதிபதி திரெளபதி முர்மு வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 21 .07. 2022 அன்று வெளியாகியது. இதில், பா.ஜ.க.வின் சார்பில் களம் இறங்கிய திரெளபதி முர்மு அமோக வெற்றி பெற்றார். இதையடுத்து, நாட்டின் 15-வது ஜனாதிபதியாக இன்று 25. 07. 2022 அவர் பதவியேற்றுக் கொண்டார். இதனை தொடர்ந்து, அவர் உரையாற்றும் பொழுது தமிழக வீரமங்கை வேலு நாச்சியாரை நினைவு கூர்ந்து இருந்தார். இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், மாண்புமிகு குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு அவர்கள் தனது முதல் உரையில் இன்று, 18 – ஆம் நூற்றாண்டில் நமது நாட்டின் விடுதலைக்காகப் போராடிய சிவகங்கை அரசி, ராணி வேலு நாச்சியாரின் வீரத்தை நினைவு கூர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கை மீண்டும் ஒருமுறை நாடறியச் செய்தார் என குறிப்பிட்டு இருக்கிறார்.