போதைப்பொருள் விவகாரம் : அதிமுக அமைச்சர் உறவினர் கைது !

போதைப்பொருள் விவகாரம் : அதிமுக அமைச்சர் உறவினர் கைது !

Share it if you like it

தமிழகத்தில் பொதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது. கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளால் குற்றசம்பவங்களும் நாள் தோறும் நடைபெறுவதாக வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெத்தாம்பிட்டமைன் போதை பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக ராகுல், காதர் மைதீன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் ராகுல் என்பவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் உறவினர் என கூறப்படுகிறது. மெத்தாம்பிட்டமைன் போதைப்பொருள் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், சுல்தான் என்பவரிடம் இருந்து வாட்ஸ் அப் குழு மூலம் போதைப்பொருளை வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதனையடுத்து சுல்தான் உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்யும் குழுவை போலீசார் தேடி வருகின்றனர்.


Share it if you like it