பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ளதால், வீட்டு வாசலில் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள்- அரசு பள்ளிகளின் அவலம் !

பள்ளி கட்டடம் சேதமடைந்துள்ளதால், வீட்டு வாசலில் வகுப்புகள் நடத்தும் ஆசிரியர்கள்- அரசு பள்ளிகளின் அவலம் !

Share it if you like it

தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த கூத்தாண்டஹள்ளியில் கடந்த, 30 வருடங்களுக்கு மேலாக அரசு துவக்கப்பள்ளி ஒன்று செயல்படுகிறது. அப்பள்ளியில் மொத்தம் 45 மாணவர்கள் படிக்கின்றனர். இரு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளி கட்டடம் சேதமடைந்ததால், பாலக்கோடு பி.டி.ஓ.,க்கள் ஆய்வு செய்து, சேதமான பள்ளி கட்டடத்தை கடந்த 10 மாதங்களுக்கு முன் இடித்து அகற்றினர்.

மேலும், இங்கு புதிய பள்ளி கட்டடம் விரைவில் கட்டி முடிக்கப்படும் என, கூறியதையடுத்து, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவரின் வீட்டு வாசலில் வகுப்புகள் நடத்த, அதிகாரிகள் ஏற்பாடு செய்தனர். பள்ளி கட்டடத்தின் பெரும்பாலான பணிகள் முடிந்து மூன்று மாதங்களான நிலையில், மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இதனால், மாணவர்கள் மழைக்காலத்தில் அவதிப்படுகின்றனர்.

பள்ளியின் மீதமுள்ள கட்டட பணியை விரைந்து முடிக்க, தர்மபுரி மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Share it if you like it