ம.தி.மு.க-வில் தலைதூக்கும் உட்கட்சி பூசல்.
தி.மு.க-வில் ஜனநாயகம் இல்லை, வாரிசு அரசியல் தலைதூக்கி உள்ளது என்று தி.மு.க தலைவராக இருந்த கலைஞர் அவர்களிடம் கோபித்து கொண்டு புதிய கட்சியை (மதிமுக) தொடங்கியவர் வைகோ. மேடைகள் தோறும் வாரிசு அரசியலுக்கு எதிராகவும், தி.மு.க-விற்கு எதிராகவும் மிக கடுமையான விமர்சனங்களை முன்வைத்தவர் வைகோ.
எனது குடும்பத்தில் இருந்து மகனோ, மருமகனோ, என யாரும் அரசியலுக்கு வரமாட்டார்கள் என்று தமிழக மக்களுக்கு முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்து இருந்தார். அதன்பின்பு என்ன? நடந்தது என்பதை தமிழக மக்கள் அனைவரும் நன்கு அறிவர். அதே பாணியில் தனது அன்பு மகன் துரை வையாபுரிக்கு ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ சமீபத்தில் கட்சியின் தலைமைக் கழகச் செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்து இருந்த நிலையில். குமுதம் ரிப்போர்ட்டர் ம.தி.மு.க-வில் ஏற்பட்டு உள்ள விரிசல் குறித்து நீண்ட கட்டுரை ஒன்றினை வெளியிட்டு இருப்பது அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.