அடேங்கப்பா… மழைக்கே திராவிட ஸ்டிக்கர் ஒட்டிய துரைமுருகன்!

அடேங்கப்பா… மழைக்கே திராவிட ஸ்டிக்கர் ஒட்டிய துரைமுருகன்!

Share it if you like it

மழைக்கும் தி.மு.க.விற்கும் என்ன சம்பந்தம் அதிலும் திராவிட ஸ்டிக்கரை ஒட்டி இருக்கிறார் நமது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன். இந்த சம்பவம் தான் பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில், திராவிட முன்னேற்ற கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக, மு.க. ஸ்டாலின் இருந்து வருகிறார். இவர், ஆட்சி அமைத்த முதல் மூன்று மாதங்களுக்கு சிக்ஸர் அடித்த முதல்வர் என்று தி.மு.க. மற்றும் அதன் அடிமை ஊடகங்கள், பத்திரிகைகள் மற்றும் சீப்பு செந்தில் போன்ற நெறியாளர்கள் வரை புகழ்ந்து தள்ளினர்.

இதனை தொடர்ந்து, அடுத்த மூன்று மாதங்களுக்கு இந்தியாவிற்கே வழிகாட்டும் நம்பர் ஒன் முதல்வர் ஸ்டாலின் தான் என அதே ஊடகங்களும், பத்திரிகைகளும் ஆஹா ஓஹோ என புகழ்ந்து வந்தன. இதையடுத்து, நாட்டிற்கே வழிகாட்டும் திராவிட மாடல் என அக்கட்சியை சேர்ந்த தலைவர்களும் சில்லறை ஊடகங்களும் பேசி வருகின்றன.

இதனிடையே, மற்றவர்களின் சாதனைகளையும், அடுத்தவர்களின் புகழையும் திருடி தி.மு.க. அரசு தொடர்ந்து ஸ்டிக்கர் ஒட்டும் பணியை கடந்த 16 மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு கூற வேண்டும் என்றால், ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மேகம் சூழ்ந்து இருந்த சமயத்தில், தமிழக மாணவர்களை மோடி அரசு பத்திரமாக மீட்டு மும்பைக்கு அழைத்து வந்தது. இதையடுத்து, சென்னை திரும்பிய தமிழக மாணவர்களை ஸ்டாலின் அரசு தான் மீட்டது போன்று அதிலும் திராவிட ஸ்டிக்கரை ஒட்டியது தி.மு.க.

இதனிடையே, தமிழகத்தை கொரோனா தொற்று புரட்டி போட்ட சமயத்தில், தன்னால் முடிந்த உதவிகளை ரிலையன்ஸ் நிறுவனம் செய்தது. இந்த சேவையை தமிழக அரசு செய்தது போன்று அதிலும் ஸ்டிக்கர் விடியல் அரசு திராவிட ஸ்டிக்கரை ஒட்டியது.

இதனை தொடர்ந்து, பள்ளி சிறுவன் அப்துல் கலாம் மற்றும் நரிகுறவர் பெண்மணி அஸ்வினிக்கு மத்திய அரசு மூலம் கிடைத்த வீட்டினை தி.மு.க. அரசுதான் செய்தது போல அதிலும் ஸ்டிக்கர் ஒட்டியது இதே தி.மு.க. அரசு.

இப்படியாக, எங்கும் ஸ்டிக்கர், எதிலும் ஸ்டிக்கர் என தி.மு.க. தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், நேற்றைய தினம் சட்ட சபையில் கூறியதாவது ; “முதலமைச்சர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்த பிறகு மழையோ மழை என பெய்து வெள்ளம் ஓடி வருகிறது என குறிப்பிட்டு இருந்தார்.

மழை என்பது தட்ப வெப்ப சூழல் மற்றும் காற்றின் அழுத்தம் போன்ற காரணங்களால் வருவது. ஒருவர் ஆட்சியில் இருப்பதால் மழை வரும் என நினைப்பது மூட நம்பிக்கை, விஞ்ஞானம் இதனை ஏற்றுக் கொள்ள விஷயம். உண்மை இவ்வாறு இருக்க, தி.மு.க. ஆட்சியில் தான் மழையோ மழை என அமைச்சர் கூறுவது சிறந்த நகைச்சுவை என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மழைக்கும் விடியல் முதல்வருக்கும் என்ன சம்பந்தம். ஆட்டை கடித்துஉ மாட்டை கடித்து கடையில் மழைக்கும் தி.மு.க. ஸ்டிக்கர் ஒட்டி இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Share it if you like it