வேலூர் மாநகராட்சியின் தொடர் மெத்தன போக்கு காரணமாக தி.மு.க. பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம்.
வேலூர் மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டியாக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பல்வேறு சீரமைப்பு பணிகள் அங்கு வேகமாக தற்போது நடைபெற்று வருகின்றன. இதனை தொடர்ந்து, வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்றன. அப்போது, சாலையின் ஓரமாக நின்று கொண்டு இருந்த இருசக்கர வாகனத்தின மீது சிமெண்ட் கொட்டி சாலை அமைத்து இருந்தனர். இச்சம்பவம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ந்து இருந்தது. இதையடுத்து, வெளியான புகைப்படம் தமிழக மக்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தது.
இதனை தொடர்ந்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கும் விதமாக, அண்மையில் கரூர் மாவட்டத்திற்கு சென்று இருந்தார். அப்போது, கரூரில் இருந்து தான்தோன்றிமலை வரை சாலை அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு இருக்கின்றனர். அவசர கதியில் இப்பணி மேற்கொள்ளப்பட்டன. இதன் காரணமாக, அச்சாலையில் பயணம் செய்த அனைவரும் கடும் அவதியை சந்திக்கும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து, அச்சாலையில் சென்ற தனியார் பேருந்து ஒன்று சாலையின் ஓரம் சிக்கி கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் மீண்டும் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருந்தன.
இப்படிப்பட்ட சூழலில், வேலூரில் மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி இருக்கிறது. வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட விஜயராகவபுரம் பகுதியில் உள்ள குடிநீர் அடிபம்புக்கும் சேர்த்து கழிவுநீர் கால்வாய் அமைத்து இருக்கின்றனர். இச்சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
எங்கும் ஊழல், எதிலும் லஞ்சம் என்பதற்கு வேலூர் மாநகராட்சியே சிறந்த உதாரணம் என பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதுதவிர, துரைமுருகன் குடும்பத்தின் பிடியில் வேலூர் மாவட்டமே சிக்கி தவித்து வருவதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். பணத்திற்கு ஆசைப்பட்டு நேசமணி போன்ற காண்ட்ராக்டர்களுக்கு ஒப்பந்தம் வழங்கும் அரசியல்வாதிகளுக்கு இதுதான் கதி என்பதே பலரின் கருத்தாக உள்ளது.