தடை செய்த அமைப்பிடம் நிதி பெற்று தமிழகத்தில் பெரும்கலவரத்தை நடத்த திட்டமிட்ட சீமான் தம்பி சாட்டை துரைமுருகன் !

தடை செய்த அமைப்பிடம் நிதி பெற்று தமிழகத்தில் பெரும்கலவரத்தை நடத்த திட்டமிட்ட சீமான் தம்பி சாட்டை துரைமுருகன் !

Share it if you like it

சீமான் பெயரை சொல்லி வெளிநாடுகளில் இருந்து சாட்டை துரைமுருகன் தன்னிச்சையாக, விடுதலை புலிகள் அமைப்புகளிடம் இருந்து பல கோடி ரூபாய் நிதி பெற்றதும், நாம் தமிழர் கட்சியை கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டதும் என்ஐஏ சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் நாம் தமிழர் கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலை புலிகள்அமைப்புகளுடன் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் ரகசிய தொடர்பு கொண்டு, பல நூறு கோடி நிதி சட்டவிரோதமாக பெற்றதாக கடந்த 2022ல் ஓமலூர் அருகே வெடிகுண்டுகள், துப்பாக்கிகளுடன் கைது செய்யப்பட்ட 2 பேர் என்ஐஏ அதிகாரிகளிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

அதில், தமிழீழ விடுதலை புலிகளுக்கு இணையாக மற்றொரு புதிய அமைப்பை நிறுவி தமிழ்நாட்டில் ஆயுதப்போராட்டத்தை நடத்தவும், இதற்காக வெளிநாடுகளில் உள்ள தடை செய்யப்பட்ட அமைப்பை சேர்ந்தவர்களிடம் இருந்து நிதி உதவி பெற்றதாகவும், இந்த ஆயுதப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் பின்னணியில் இருப்பதாகவும் வாக்குமூலம் அளித்தனர். அதன் அடிப்படையில், என்ஐஏ அதிகாரிகள் பல மாதங்களாக ஆதாரங்கள் மற்றும் வெளிநாட்டு நிதி தொடர்பான பணபரிமாற்றங்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

கைது செய்யப்பட்ட சஞ்சய் பிரகாஷ், நவீன் சக்கரவர்த்தி ஆகியோரின் வாக்குமூலத்தில் கூறியபடி, நாம் தமிழர் கட்சியின் செய்தி தொடர்பு கொள்கை பரப்பு மாநில செயலாளரும், யூடியூபருமான சாட்டை துரைமுருகன், கோவை ஆலாந்துறையில் நாதக தொழில்நுட்ப பாசறை பிரிவு முன்னாள் நிர்வாகி ரஞ்சித்குமார்(33), நாதக மாநில கொள்கை பரப்பு செயலாளர் இசை மதிவாணன்(40), மாவட்ட தகவல்
தொழில்நுட்ப அணி செயலாளர் விஷ்ணு பிரதாப் (25), முன்னாள் நிர்வாகி சென்னை கொளத்தூர்
பொறியாளர் பாலாஜி(33) ஆகியோர் நேரடி தொடர்பில் இருந்தது உறுதியானது.


Share it if you like it