பூமி தட்டையானது, சுற்றாது… இஸ்லாமிய மதகுரு கண்டுபிடிப்பு!

பூமி தட்டையானது, சுற்றாது… இஸ்லாமிய மதகுரு கண்டுபிடிப்பு!

Share it if you like it

பூமி தட்டையானது, அது ஒருபோதும் சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும்தான் சுற்றி வருகிறது என்று இஸ்லாமிய மதகுரு ஒருவர் அச்சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாடம் நடத்தும் வீடியோ வெளியாகி சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.

பூமி உருண்டையானது எனவும், அது தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றி வருகிறது எனவும் விஞ்ஞானம் கூறுகிறது. இதுதான் உண்மையும்கூட. ஆனால், இஸ்லாமிய மதகுரு ஒருவர், பூமி தட்டையானது எனவும், அது ஒருபோதும் சுற்றுவதில்லை. சூரியனும், சந்திரனும்தான் பூமியை சுற்றி வருகிறது என்றும் மாணவர்களுக்கு பாடம் நடத்துகிறார். இது தொடர்பான காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அக்காணொளியில் மாணவர்கள் குழு ஒன்று, இஸ்லாமிய மதகுரு ஒருவருடன் கலந்துரையாடுகிறது.

அப்போது, ஒரு மாணவர் பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டு, சூரியனையும் சுற்றுவது தொடர்பாக கேள்வி எழுப்புகிறார். அதற்கு, அந்த மதகுரு, பூமி நிலையாக ஒரே இடத்தில்தான் நிற்கிறது. ஆனால், பூலோகவியல் மற்றும் அறிவியல் பாடத்தில் பூமி உருண்டை என்றும், அது தன்னைத்தானே சுற்றிக் கொள்வதாகவும் கூறுகிறார்கள். இந்த அறிவியல் கோட்பாடு தவறானது. குரான் மற்றும் ஹதீஸ்தான் உண்மையான கோட்பாடு. அதன்படி, பூமி தட்டையானது மற்றும் நிலையானது. இஸ்லாமிய அறிஞர் ஆலா ஹஸ்ரத் இதை நிரூபித்திருக்கிறார். ஆகவே, நாம் எதை ஒப்புக்கொள்ளப் போகிறோம். இஸ்லாம்தான் ஒரே மதம் என்று பதிலளிக்கிறார்.

இதையடுத்து, அப்படியானால் காலையில் சூரியன் உதிப்பதும், மாலையில் மறைவதும், அதேபோல சந்திரன் மாலையில் உதிப்பது, காலையில் மறைவதும் எப்படி என்று கேள்வி எழுப்புகிறான். அதற்கு அந்த மதகுரு, சூரியனும், சந்திரனும்தான் பூமியை சுற்றி வருகின்றன. சூரியன் உருண்டையானது. இதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அல்லாவின் ஆணைப்படி சூரியன் சுற்றி வருகிறது. அதேபோலதான், சந்திரனும் சுற்றி வருகிறது. இங்கு மறையும் சூரியன் வேறொரு இடத்தில் உதிக்கிறது. சந்திரனும் இப்படித்தான். எல்லாம் அல்லாவின் ஆணைப்படி நடக்கிறது. ஆகவே, குரானும், ஹதீஸும் என்ன சொல்கிறதோ, அதைத்தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறார்.

இக்காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த பலரும், அறிவியலை தவறு என்று மாணவர்களுக்கு தவறாக பாடம் சொல்லிக் கொடுக்கும் இஸ்லாமிய மதகுருவை நினைத்து வேதனை தெரிவிக்கின்றனர்.


Share it if you like it