அமலாக்கத் துறை தயாரித்த 400 கேள்விகள்-அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் தொடுக்கப்பட்ட போது,’நினைவில்லை’ ‘தெரியாது’ ‘அது என் பணம் இல்லை என வந்த பதில்கள்!
சட்டவிரோத பணமாக பரிமாற்றம் செய்த புகாரில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. உடல் நிலைக்குறைவால், சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியைஅமலாக்கத்துறை 5- நாள் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து அவர் கடந்த 7- ஆம் தேதியிலிருந்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.இதற்காக அமலாக்கத்துறை அதிகாரிகள் 400-க்கும் மேற்பட்ட கேள்விகளை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கேள்விகளுக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை அதிகாரிகள் 3- பேர் சுழற்சி முறையில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 250 கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் ஆனால் பெரும்பாலான கேள்விகளுக்கு ‘தெரியாது’ ‘நினைவில்லை’ ‘அது எனது பணம் இல்லை’ என அவர் பதில் அளித்ததாகவும் கூறப்படுகிறது.அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு தொடர்ந்து விசாரணை நடத்தப்படாமல் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது.
மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். செந்தில் பாலாஜியிடம் அவரது சகோதரர் அசோக் குறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.அதுமட்டுமின்றி செந்தில் பாலாஜியின் மனைவியின் வங்கி கணக்கில் பல கோடி ரூபாய் அளவில் பணம் பரி மாற்றம் நடைபெற்று குறித்தும் விசாரணை நடைபெற்றதாக கூறப்படுகிறது. வரும் 12-தேதி வரை செந்தில் பாலாஜியிடம் விசாரணை நடத்தப்பட்டு அதன் பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளார்.அவர் அளித்து வரும் பதில்கள் அனைத்தையும் தனி வீடியோவாக அமலாக்கத் துறையினர் பதிவு செய்து வருகின்றது.பதில்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்படுவதாகவும் கூறப்படுகிறது.இதனிடையே கரூர் அருகே அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் கட்டி வரும் வீட்டிலும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.