சன் நியூஸில் உண்மைச் செய்தியா? ஷாக்கான பொதுமக்கள்!

சன் நியூஸில் உண்மைச் செய்தியா? ஷாக்கான பொதுமக்கள்!

Share it if you like it

கடந்த 3 மாதங்களாக தனக்கு ஊதியம் வழங்கப்படாததை கண்டித்து, பெண் ஆசிரியர் ஒருவர் வட்டார கல்வி அலுவலகத்தை சூறையாடிய செய்தியை தி.மு.க. ஆதரவு ஊடகமான சன் நியூஸ் வெளியிட்டிருப்பதுதான் மக்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாகவே, மாறன் சகோதரர்களுக்குச் சொந்தமான சன் டி.வி., சன் நியூஸ், தினகரன் உள்ளிட்ட சன் நெட்வொர்க் குழுமத்தில் தி.மு.க.வுக்கு எதிரான செய்திகள் வெளிவராது. அப்படியே வெளிவந்தாலும், அச்செய்தியை ஒட்டி, வெட்டி பக்காவாக எடிட் செய்து வெளியிடுவதில் கில்லாடிகள். இந்த நிலையில், நியூஸ் 18 தொலைக்காட்சியில் தலைமை ஆசியராக இருந்து, மத்திய அரசுக்கு எதிராக பொய்ச் செய்திகளாக வெளியிட்டு வந்த குணசேகரன், அத்தொலைக்காட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு, தற்போது சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றிருக்கிறார். இவர், திராவிடர் கழகத் துணைத் தலைவரும், விடுதலை நாளிதழின் பொறுப்பாசிரியருமான கலி.பூங்குன்றனின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகவே, குணசேகரன் பதவியேற்ற நாளில் இருந்தே, மத்திய அரசு, பிரதமர் மோடி, பா.ஜ.க. மற்றும் ஹிந்துக்களின் வழிபாட்டு முறை, கலாசாரம், பண்பாடு போன்றவற்றை விமர்சனம் செய்து வருகிறார். மேலும், இஸ்லாமிய அடிப்படைவாதிகள், கிறிஸ்தவ மிஷனரிகள், பிரிவினைவாதிகள் செய்யும் தவறுகளை கண்டும் காணாமலும், ஓட்டு அரசியலை கருத்தில் கொண்டு சிறுபான்மை மக்களை தாஜா செய்யும் வகையிலும் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக, தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதில் இருந்து, ஆளும் அரசுக்கு எதிராக எந்த செய்திகளும் வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில்தான், தமிழக மக்களே ஆச்சரியப்படும் வகையில், தி.மு.க. ஆட்சியின் அவலத்தை சுட்டிக்காட்டி சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. அதாவது, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஆசிரியர் ஒருவர், தனக்கு ஊதியம் கிடைக்காத விரக்தியில், வட்டாரக் கல்வி அலுவலகத்தில் இருந்த பொருட்களை சூறையாடி இருக்கிறார். இச்செய்தியைத்தான் சன் நியூஸ் தொலைக்காட்சி வெளியிட்டிருக்கிறது. இதுதான் மக்கள் மத்தியில் மிகுந்த ஆச்சர்யத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதை எங்களால் நம்ப முடியவில்லை என்று சொல்லி, தங்களை தாங்களே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் மக்கள், கவுண்டமணி பாணியில் ஒருவேளை நம்ம நாதஸ் (குணசேகரன்) திருந்திட்டானா என்று புல்லரித்துப் போகிறார்கள்.

Image

Share it if you like it