ஊழல் புகார் தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் மேற்கு வங்க முதல்வராக இருப்பவர் மம்தா பேனர்ஜி. தமிழகத்தில் எப்படி ஊழல், லஞ்சம், தலை விரித்து ஆடி வருகிறதோ? அதைவிட பல மடங்கு அம்மாநிலம் திகழ்ந்து வருகிறது. முதல்வர் மம்தாவின் சொல்லிற்கு கட்டுப்படாமல் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்கள் தங்கள் மனம் போன போக்கில் செயல்பட்டு வருகின்றனர். இதுதவிர, பல்வேறு முறைகேடு சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளன. இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருக்கும் பார்த்தா சாட்டர்ஜி மீது பல்வேறு ஊழல் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
அந்த வகையில், கடந்த 2016- ம் கல்வி அமைச்சராக இருந்தவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் நியமனத்தில் மிகப்பெரிய முறைகேடு செய்ததாக புகார் சொல்லப்பட்டது. இதையடுத்து, சி.பி.ஐ. தீவிர விசாரணையை மேற்கொண்டது. அந்த வகையில், இம்முறைகேட்டில் ரூ.100 கோடி அளவுக்கு ஊழல் நடந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து, அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் சாட்டர்ஜியிடம் தீவிர விசாரணையை மேற்கொண்டு இருந்தனர். இதனை தொடர்ந்து, மேற்கு வங்க மாநிலத்தில் சுமார் 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையை நடத்தி இருந்தனர். இந்த நிலையில் தான், சாட்டர்ஜிக்கு மிக நெருக்கமானவராக பார்க்கப்படும் அர்பிதா முகர்ஜி என்பவரது வீட்டில் ரூ .20 கோடி ரூபாயை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.