பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டின் உயரிய விருது!

Share it if you like it

பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு, எகிப்து நாட்டு அரசின் உயரிய விருதான “Order of the Nile” விருதை வழங்கி அந்நாட்டு அரசு கவுரவித்திருக்கிறது.

பாரத பிரதமர் நரேந்திர மோடி, தனது அமெரிக்க பயனத்தை முடித்துக் கொண்டு, 2 நாள் பயணமாக எகிப்து சென்றிருக்கிறார். அந்நாட்டின் தலைநகர் கெய்ரோ விமான நிலையத்தில், பிரதமர் மோடியை அந்நாட்டின் பிரதமர் முஸ்தபா மட்புலி வரவேற்றார். இப்பயணத்தின்போது, இரு நாடுகளுக்கும் இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும் எனவும், முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பிரதமர் மோடிக்கு எகிப்து நாட்டு அரசின் உயரிய “Order of the Nile” விருது வழங்கப்பட்டிருக்கிறது. இதை அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். பிரதமர் மோடிக்கு எகிப்து நாடு தனது உயரிய அரச விருதை வழங்கியிருப்பது இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணமாக பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி பெரும் 13-வது உயரிய விருது இதுவாகும்.

பிரதமர் மோடிக்கு பப்புவா நியூ கினியா நாட்டின் “Companion of the Order of Logohu” என்கிற மிக உயரிய சிவிலியன் விருது நிகழாண்டு மே மாதம் வழங்கப்பட்டது. அதேமாதம், ஃபிஜி நாட்டின் “Companion of the Order of Fiji” என்கிற மிக உயர்ந்த விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. அதேபோல, பலாவ் குடியரசின் அதிபர் சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர், அந்நாட்டின் உயரிய விருதான “Ebakl Award by the Republic of Palau” விருதை வழங்கி கவுரவித்தார்.

பூடான் நாட்டு அரசின் மிக உயரிய சிவிலியன் விருதான “Order of the Druk Gyalpo” 2021-ம் ஆண்டு டிசம்பரில் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு அமெரிக்க ஆயுதப் படைகளின் “Legion of Merit” விருதினை, அமெரிக்க அரசாங்கம் பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தது. வளைகுடா நாடுகளால் வழங்கப்படும் உயரிய மரியாதையான மறுமலர்ச்சியின் மன்னர் ஹமாத் ஆணை “King Hamad Order of the Renaissance” எனும் பஹ்ரைன் ஆணை 2019-ல் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது.

தவிர, ரஷ்யா, மாலத்தீவு, ஐக்கிய அரசு எமிரேட்ஸ், பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சவூதி அரேபியா, ஆகிய நாடுகளும் தங்கள் நாட்டின் மிக உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.


Share it if you like it