ஹிந்து கோயில்களிலும் தேர்தல் பிரசாரம்: டாக்டர் கிருஷ்ணசாமி தடாலடி!

ஹிந்து கோயில்களிலும் தேர்தல் பிரசாரம்: டாக்டர் கிருஷ்ணசாமி தடாலடி!

Share it if you like it

கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இஸ்லாமிய மசூதிகளிலும் தேர்தல் பிரசாரம் செய்யப்படுவதுபோல, இனி ஹிந்து கோயில்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தடாலடியாகக் கூறியிருக்கிறார்.

பாரத பிரதமராக மோடி பதவியேற்ற பிறகு, முதல்கட்டமாக செய்த வேலை இந்தியாவில் அப்பாவி ஏழை எளிய ஹிந்துக்கள் மத மாற்றம் செய்யப்படுவதை தடுக்க செக் வைத்ததுதான். அந்த வகையில், மத மாற்றம் செய்ய கிறிஸ்தவ மிஷனரிகளும், இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டில் இருந்து பெறும் நிதியை முடக்கினார். மேலும், மத மாற்றத் தடைச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் மத மாற்றத் தடைச் சட்டமும் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

இதனால், கிறிஸ்தவ மிஷனரிகளும், இஸ்லாமிய அடிப்படைவாதிகளும் பிரதமர் மோடி மீது கடும் ஆத்திரத்தில் இருக்கிறார்கள். இதன் காரணமாக, கிறிஸ்தவ தேவாலயங்களிலும், இஸ்லாமிய மசூதிகளிலும் மோடிக்கு எதிராக விஷமப் பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது மோகன் சி லாசரஸ் போன்ற கிறிஸ்தவ அன்னிய கைக்கூலிகளும், பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா உள்ளிட்ட இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மசூதிகளும் மோடிக்கு வாக்களிக்க வேண்டாம் என்று பிரசாரம் செய்தார்கள். இது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில்தான், கிறிஸ்தவ தேவாலயங்கள், இஸ்லாமிய மசூதிகளைப் போல ஹிந்துக் கோயில்களிலும் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறியிருக்கிறார். இதுகுறித்து நியூஸ் 18 தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த டாக்டர் கிருஷ்ணசாமி, “மக்கள் கோயில்களுக்கும், மசூதிகளுக்கும், சர்ச்களுக்கும் செல்வது மன நிம்மதிக்காதத்தான். ஆனால், 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பிருந்து தற்போது வரை கடந்த சில ஆண்டுகளாகவே கிறிஸ்தவ தேவாலங்களிலும், இஸ்லாமிய மசூதிகளிலும் மக்கள் மத்தியில் விஷமப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக, மோடிக்கு எதிராக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. அப்படியானால், மதுரை மீனாட்சியம்மன் கோயில், பழனி, திருச்செந்தூர் உள்ளிட்ட முருகன் கோயில்கள் மற்றும் தமிழகத்திலுள்ள அனைத்து ஹிந்துக் கோயில்களிலும் தேர்தல் பிரசாரம் செய்யலாமா, அதற்கு தமிழக அரசு அனுமதிக்குமா?” என்று தடாலடியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். இந்த காணொளிதான் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Share it if you like it