கோயமுத்தூரில் தி.மு.க.வுக்கு ஓட்டுக்கேட்ட ருமேனியா நாட்டைச் சேர்ந்தவருக்கு, அந்நாட்டு தூதரகம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதையறிந்த நெட்டிசன்கள், 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, தி.மு.க.வுக்கு ஓட்டுக்கேட்டு வாழ்க்கையை தொலைச்சுட்டியே பரட்டை என்று வச்சு செய்து வருகிறார்கள்.
ருமேனியா நாட்டைச் சேர்ந்தவர் ஸ்டெபன் நெகோசியா. தொழில் நிமித்தமாக இந்தியா வந்த இவர், சமீபத்தில் கோயமுத்தூருக்கு சென்றிருந்தார். இந்த சூழலில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பிரசாரம் களைகட்டத் துவங்கியது. இதுபோன்ற பிரசாரத்தைக் கண்டிராத ஸ்டெபன் நெகோசியாவுக்கு ஆர்வம் தாங்கவில்லை. தானும் பிரசாரத்தில் ஈடுபட விரும்பி இருக்கிறார். உடனே, அங்குள்ள தி.மு.க.வினர், ஸ்டெபன் புல்லட்டில் தி.மு.க. கொடியை கட்டி விட்டதோடு, கையிலும் உதயசூரியன் சின்னம் பொறித்த, பதாகையை கொடுத்த விட்டனர்.
விவரம் புரியாத ஸ்டெபனும், தி.மு.க. கொடி கட்டிய புல்லட்டில் கோயமுத்தூர் நகரில் ஹாயாக வலம் வந்தார். மேலும், ஆங்காங்கே வண்டியை நிறுத்தி உதயசூரியன் சின்னம் பொறித்த பதாகையை தூக்கிக் காட்டி பொதுமக்களிடம் வாக்குச் சேகரித்தார். அதோடு, தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக பொதுமக்களிடம் நோட்டீஸ் விநியோகித்தும் ஓட்டுச் சேகரித்தார். உடனே, உடன் பிறப்புகள் ஆர்வமிகுதியால் ஸ்டெபன் ஓட்டு சேகரிபப்தை வீடியோவாகவும், போட்டோவாகவும் எடுத்து, தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்கும் ருமேனியா நாட்டுக்காரர் என்று பெருமையாக சமூக வலைத்தளங்களில் பரவ விட்டனர். இது சோஷியல் மீடியாக்களில் வைரலானது. மேலும், மீடியாக்களிலும் செய்தியாக வெளியானது.
இதுதான் ஸ்டெபனுக்கு வில்லங்கமாக அமைந்து விட்டது. தி.மு.க.வுக்கு ஓட்டுக்கேட்ட செய்தி வெளியானது ருமேனியா நாட்டு தூதரகத்துக்கு தெரிந்து விட்டது. உடனே, சென்னையிலுள்ள ருமேனியா நாட்டு தூதரகத்தில் ஆஜராகுமாறு ஸ்டபென் நெகோசியாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது அந்நாட்டு தூதரகம். இதுவும் செய்தியாக வெளியாகவே, 200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு… தி.மு.க.வுக்கு ஓட்டுக்கேட்டு… வாழ்க்கையை தொலைச்சுட்டியே பரட்டை என்று வச்சு செய்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.