என் மண் என் மக்கள்  யாத்திரை –  மாபலியாய் அமிழத் தொடங்கிய திராவிடம்.

என் மண் என் மக்கள் யாத்திரை – மாபலியாய் அமிழத் தொடங்கிய திராவிடம்.

Share it if you like it

தேசிய தலைமையின் முகமாக களமிறங்கி தன் அயராத உழைப்பு அர்ப்பணிப்பால் தொண்டர்கள் – பொதுமக்கள் பாதுகாப்பு உறுதி செய்த அவர்கள் நம்பிக்கை பெற்ற அண்ணாமலை மாபெரும் மக்கள் தலைவராக உருவெடுத்தார். தனது முதல் அடியில் திராவிட ஊழலை அடித்து துவம்சம் செய்து அதிகார கொள்ளையின் சுரண்டலை மக்களுக்கு உணர்த்தினார்.

இரண்டாவது அடியில் வாக்கு வங்கி அரசியலுக்காக இங்கு திராவிட அரசியல் உரம் போட்டு வளர்த்த மத பயங்கரவாதத்தை மத்திய அரசின் மூலம் தடுத்து மாநில தேச பாதுகாப்பை உறுதி செய்தார்.இதோ மூன்றாவது அடியாக தமிழகம் முழுவதும் யாத்திரையாக மக்களோடு மக்களாக பயணித்து இங்கு தேவை மக்களின் நலன் பாதுகாப்பு வளர்ச்சி முன் எடுக்கும் தேசிய மாதிரி அரசியல் தவிர ஒரு குடும்பம் வாழ நாட்டை சீரழிக்கும் பிற்போக்கு அரசியல் அல்ல என்பதை உணர செய்கிறார்.

மத்திய அரசின் பாதுகாப்பு – மக்கள் நல திட்டங்கள மூலம் வர இருக்கும் நன்மைகளை எடுத்து சொல்வதோடு அதில் திராவிடம் செய்யும் அரசியலையும் சேர்த்து பேசி மக்கள் ஏமாற்றப்படும் உண்மையை உணர செய்கிறார். இதன் விளைவாக போகும் இடமெல்லாம் சாதி மத இன மொழி பேதமின்றி மக்கள் அவர் பின் திரள்கிறார்கள். இந்த யாத்திரை முடிவில் தமிழகத்தில் மாபெரும் தேசிய எழுச்சி மேலோங்கி திராவிடத்தை காணாமல் போக செய்திருக்கும்.

மோடி – அமித்ஷா – நட்டா என்னும் மும்மூர்த்திகளை நன்கறிந்தவர்களுக்கு திரு அண்ணாமலை அவர்கள் ஏதோ போகிற போக்கில் தமிழக பாஜகவிற்கு வந்தவர் அல்ல. தமிழகத்தின் கள நிலவரம் திராவிடத்தின் சூழ்ச்சிகளை அறிந்தவர்கள் மருத்துவர் – வழக்கறிஞர் என்ற துறைசார் வல்லுநர்களையும் பாஜக தலைவர் என்ற காரணத்தால் திராவிடம் படுத்திய பாட்டையும் பார்த்து தான் தெளிவான திட்டமிடலோடு காவலனை களமிறக்க தோதுவாக ஓராண்டு காலம் தலைமை பதவியை காலியாக வைத்திருந்தார்கள் என்ற வியூகம் புரிந்திருக்கும்

தமிழகம் முழுவதிலிருந்தும் தேர்ந்த நேர்மையாளர்கள் – திறமையாளர்கள் என்ற வரிசையில் சல்லடை போட்டு சலித்து அதில் டாப் 10 என்ற அளவில் இருந்து பலரை தேர்ந்தெடுத்து அதிலிருந்து சிலரை தேர்வு செய்து தான் இது போன்ற விஷயத்திற்கு அணுகி இருப்பார்கள். அதில் எல்லா விஷயத்திற்கும் ஒத்துவரும் ஒரு நபரை தேர்ந்தெடுத்து முதலில் துணைத்தலைவராக எல்லா விஷயங்களையும் அணு அணுவாக கண்காணிக்க தோதாக களம் இறக்கி குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு மாநில தலைமையில் அமர்த்தி விட்டார்கள். இப்படித்தான் திரு அண்ணாமலை அவர்களின் அரசியல் பிரவேசம் இருந்திருக்கும் என்பதை மோடி – ஷா கூட்டணியை மனமார உணர்ந்த யாருக்கும் அப்போதே புரிந்திருக்கும்.

அண்ணாமலை அவர்களின் எந்த ஒரு முடிவிற்கும் இதுவரை தேசிய தலைமை தடை போட்டதில்லை. ஆனால் அவரின் பரிந்துரைகள் – அவரின் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் தேசிய தலைமையும் மத்திய அரசும் முழு அக்கறையோடு செயல்படுவதை பார்த்தோம். இதையெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தாலே தமிழகத்தில் பாஜக மாநில தலைவராக இருக்கும் திரு அண்ணாமலை ஐபிஎஸ் தனி மனிதர் அல்ல. அவருக்கு பின்னால் மும்மூர்த்திகளின் முழு பலம் இருக்கிறது. அவ்வகையில் அவர் அந்த மும்மூர்த்திகளின் மனசாட்சியாக தான் தமிழகத்தில் வலம் வருகிறார் என்பது ஒவ்வொருவருக்கும் தெரிந்திருக்கும்.

அந்த வகையில் பாஜகவின் மாநில தலைவராக பொறுப்பேற்ற நாள் முதலாய் நேரடியான மக்கள் சந்திப்பு , – கள ஆய்வு ,- மக்கள் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து போராட்டம் , -ஆலய பாதுகாப்பு தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை அத்தனை பேரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்கான எத்தனையோ முன்னெடுப்புகள் என்று தலைவரும் பம்பரமாக சுழன்று வந்தார். இந்த நடவடிக்கைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் எத்தனையோ சில்லறைகள் சிதறி ஓடியதை பார்த்தோம். ஒரு பக்கம் தமிழகத்தின் பாதுகாப்பு , – மறுபக்கம் கட்சியின் வளர்ச்சி, – இரண்டிற்கும் இடையில் தொண்டர்களைக் கடந்து பொது மக்களின் பாதுகாப்பு என்று கிட்டத்தட்ட ஒரு மாநிலத்தின் முதல்வருக்கு உண்டான அத்தனை பணிகளையும் தனி ஒரு ஆளாக செய்து வரும் மாநில தலைவரின் வளர்ச்சியையும் அவரின் தலைமையில் பாஜகவின் வளர்ச்சியையும் காண சகிக்காத திராவிட விஷ நரிகள் அவர்களின் அடிப்பொடிகளை ஏவி விட்டு அவரின் மீது வன்மத்தை கக்க எவ்வளவு சூழ்ச்சிகளை செய்தது? என்பதையும் அந்த சூழ்ச்சிகள் எல்லாம் அவர் தவிடு பொடி ஆக்கிய போது அந்த அம்புகள் எல்லாம் ஏவி விட்ட இடத்தை நோக்கி தலை தெறிக்க ஓடியதையும் பார்த்தோம்.

அத்தனையும் கடந்து வந்த மாநில தலைவர் தமிழகத்தை மீட்க முதல்படியாக திராவிடத்தின் முதுகெலும்பான பணபலம் அச்சுறுத்தல் அரசியல் என்ற மாயமானை வெற்றி கொள்ள தனக்கான பாதுகப்பு தொடங்கி தமிழகத்தின் பாதுகாப்பு வரை உறுதிசெய்து மக்களை நிம்மதி பெருமூச்சு விட செய்து அச்சுறுத்தல் அரசியலுக்கு முடிவுரை எழுதினார். அடுத்த கட்டமாக அதிகார கொள்ளையே கொள்கையாக கொண்டவர்களின் முகத்திரையை கிழிக்க சித்திரை முதல் நாளில் முகூர்த்தமும் குறித்து . தான் சொன்னபடி தன் கை கடிகார ரசீது உட்பட தன் சொத்து வருவாய் மூலங்களையும் பொது வெளியில் வைத்து விட்டார். தமிழகத்தை அரை நூறாண்டுகள் சூறையாடிய இருண்ட பக்கங்களை தோலுரிக்க தொடங்கிவிட்டார். ஆம் .ஊழல் என்ற அதிகார கொள்ளையால் உயிர் வலியிலிருக்கும் தமிழ் மண்ணை மக்களை காக்க அபாயகரமான ஒரு அறுவை சிகிச்சைக்கு அவர் தயாராகி விட்டார்.

எப்படி பண மதிப்பிழப்பு விவகாரத்தில் புல்லுருவிகளின் பிரசாரத்தை மறுதலித்து தேசம் மோடியின் பக்கம் நின்றதோ ? அவ்வாறே தங்களை இலவசம் வாக்களிக்க பணம் என்ற மாயமானை முன்நிறுத்தி பிச்சைக்காரர்களாக கேயேந்த வைத்த திராவிடத்தை சூரசம்ஹாரம் செய்ய புறப்படும் அண்ணாமலையின் பக்கம் தமிழகம் நிற்கிறது. அவரது அறுவை சிகிச்சையின் வலி – வேதனை – இழப்பு கடந்து தன் சந்ததிகளின் நலனை பாதுகாப்பை உறுதி செய்ய கட்சி அரசியல் சாதி – மத – மொழி – இன பேதம் கடந்து மக்கள் மோடியின் மனசாட்சியாக அவர்களின் கண் முன் வலம் வரும் அண்ணாமலைக்கு பக்க பலமாக தயராகி விட்டார்கள்.

அண்ணாமலை பாஜக தலைவரான பிறகு நடந்ததெல்லாம் சலசலப்புகள் என்றால் அவரின் டிஎம்கே ஃபைல்ஸ் எனும் ஆவணக்காட்சிகை அரசியல் பூகம்பம் என்றே சொல்லலாம். இதோ அடுத்து என் மண் என் மக்கள் என்ற யாத்திரை மூலம் பயணிக்கும் வழியெங்கும் பூகம்பத்தின் நீட்சியான சுனாமியாக தமிழக அரசியலில் இருந்து திராவிடத்தை வாரி சுருட்டி கொண்டு போகிறார். பெரும் பூகம்பம் அந்த பிரளயத்தின் முடிவில் தமிழகம் திராவிட மாயை அகன்று தேசிய பாதையில் வீறு கொண்டு பயணிக்கும். கடைக்கோடி தொண்டனுக்கும் தலைமையின் மீது முழு நம்பிக்கையும் அர்ப்பணிப்போடு களப்பணி ஆற்ற வேண்டும் என்ற உற்சாகமும் வரக்கூடும். அதையெல்லாம் கருத்தில் கொண்டு தேசிய தலைமையின் முழு ஆசியோடு தான் மாநில தலைவர் ஒரு தலைவராக தனது கடமையை சரியாக செய்து வருகிறார்.

என் மண் என் மக்கள் என்ற பெயரிலான தமிழக பாஜக தலைவர் திரு அண்ணாமலை ஐபிஎஸ் அவர்களின் ஊழலுக்கு எதிரான யாத்திரை வெறும் தேர்தல் வெற்றிக்காகவோ ஆட்சி அதிகாரம் வேண்டியோ முன் எடுக்கும் அரசியல் வியூகம் இல்லை. ஆன்மீக பூமியான தமிழகம் நேதாஜியின் இந்திய தேசிய இராணுவத்தில் தேவரின் வழியில் தாமாக முன்வந்து இணைந்த மக்கள் இன்று திராவிட மாயையில் விழுந்து தேசிய தெய்வீக மாண்பை இழந்து இலஞ்சம் ஊழல் என்ற அதிகார கொள்ளையை ஆளுமையாகவும் தங்களின் அன்றாட துயரை இயலாமையாகவும் கடந்து போகும் பிறழ் முரண் சிந்தனையில் இருந்து மாட்சிமை தாங்கிய தமிழக மண்ணையும் மக்களையும் மீட்டெடுக்க தொடங்கப்பட்ட தர்மத்தின் வேள்வி.

இந்த வேள்வியின் நாயகனாக வலம் வரும் தமிழக பாஜக தலைவர் இந்த தர்ம வேள்வியில் தமிழகத்தில் தலைவிரித்தாடும் இலஞ்சம் ஊழல் அதிகார துஷ்பிரயோக திராவிட அரசியல் மற்றும் இந்த மண்ணை மக்களை கூறு போட துடிக்கும் சாதி மத இன மொழி அரசியல் இந்து இந்திய விரோதம் மத பயங்கரவாதம் தேச பிரிவினைவாதம் என்ற விஷ நாகங்களை எல்லாம் அந்த வேள்வியில் ஆகுதியாக்கி இங்கு தேசிய தெய்வீக மாண்பை மீட்டெடுக்கும் புண்ணிய யாத்திரை . இந்த யாத்திரையை அவர் இராமனின் கர்ம பூமியான இராமேஸ்வரத்தில் தொடங்கிய அண்ணாமலை தனது கர்ம பூமியான சென்னையில் முடிப்பதே இதன் தனி சிறப்பு.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் மூன்றாம் அடியான இந்த யாத்திரை முடியும் போது தமிழக மக்கள் உழைப்பு உயர்வு தரும் இலவசம் படுகுழியில் வீழ்த்துவதும் என்று உணர்வாளர்கள். தகுதி திறமைக்கு வாய்ப்பு வழங்கி பாதுகாப்பு வளர்ச்சி சார்ந்த தேசிய மாதிரி அரசியலுக்கு தயராவார்கள்.எதற்கு எடுத்தாலும் தினம் ஒரு போராட்டம் ஆர்ப்பாட்டம் என்ற எதிர்மறை அரசியலும் மக்களை மடைமாற்றும் அந்நிய சூழ்ச்சி என்பதை உணர்ந்து அரசியல் விழிப்புணர்வு பெறுவார்கள். நிலையான வளர்ச்சி அமைதி தரவல்ல சுதேச அரசே நம்மையும் நம் சந்ததியையும் பாதுகாப்பாக நம் மண்ணில் வாழவைக்க முடியும் என்று உணர்வாளர்கள்.

மதம் மொழி இனம் சாதி என்று மக்களை கூறுபோட்டு அதிகார கொள்ளையையும் துஷ்பிரயோகத்தையும் செய்து தங்களை வளப்படுத்திக் கொள்வதற்காக மக்களை வஞ்சிக்கும் மக்கள் விரோத அரசியலை தூக்கி எறிவார்கள். தமிழகத்தில் இருக்கும் மதமாற்ற பயங்கரவாத பிரிவினைவாத சக்திகளின் கோர முகம் உணர்ந்து அவர்களின் பிடியில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள பாஜக என்ற அரண் தேவை என்ற முடிவில் மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற வட இந்திய மக்களை போல திரு அண்ணாமலை அவர்கள் துணையோடு தேசிய நீரோட்டத்தில் இணைவார்கள்.

ஜெய் ஹிந்த் ஜெய் ஸ்ரீ ராம்


Share it if you like it