உத்தர பிரதேசத்தில் மிகப்பெரிய சதி செயலில் ஈடுபட முயன்ற பிரபல கொள்ளையர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கையை உ.பி. காவல்துறையினர் மேற்கொண்டு இருக்கின்றனர்.
உத்தர பிரதேசத்தில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத். இவரது, அதிரடியான அரசியல் மூலம் இந்தியாவை கடந்து உலகம் முழுவதும் பிரபலம். அந்த வகையில், கடந்த 2017- ஆம் ஆண்டு நடைபெற்ற உ.பி. சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத்தை முதல்வராக பா.ஜ.க. தேர்வு செய்தது. ஆனால், சமாஜ்வாடி, தி.மு.க. காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் ஒரு சாமியார் உ.பி. முதல்வரா? என கேலி, கிண்டல் செய்தனர்.
ஆனால், அதுகுறித்து எல்லாம் கவலைக் கொள்ளாமல், பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளின் மூலம் உ.பி. மக்களின் முழு நம்பிக்கையை பெற்றார். இதையடுத்து, அம்மாநிலத்தில் சட்டம், ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் ஏழை, எளியவர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். அந்த வகையில், கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற உ.பி. சட்டமன்ற தேர்தலில், யோகி ஆதித்யநாத் மீண்டும் அமோக வெற்றி பெற்றார்.
இதனை தொடர்ந்து, மீண்டும் உ.பி. முதல்வராக யோகி தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில், சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் நபர்கள் மற்றும் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் நபர்களுக்கு தனது மறு முகமான புல்டோசர் பாபாவாக காட்சி கொடுத்து வருகிறார். இதன் காரணமாக, அம்மாநிலத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையர்களின், தொல்லையின்றி நிம்மதி பெருமூச்சு விட துவங்கி இருக்கின்றனர்.
இதனிடையே, பீகாரை சேர்ந்த பிரபல கொள்ளை கும்பலின் தலைவனாக இருப்பவன் ரயீஸ் கான். இவன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து உ.பி.யில் மிகப்பெரிய சதி செயலை செய்ய திட்டமிட்டு இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனை அறிந்த உ.பி. போலீசார் துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையர்களை சுட்டு பிடித்து கைது செய்து இருக்கின்றனர். அதன் லிங்க் இதோ.
சாமியார் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக தமிழக மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அதே வேளையில், விடியல் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு இருக்கிறது என்பதற்கு கீழ்கண்ட காணொளியே சிறந்த உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.