அடேங்கப்பா… பயங்கரமான கழிவுநீர் வடிகாலா இருக்கே..!

அடேங்கப்பா… பயங்கரமான கழிவுநீர் வடிகாலா இருக்கே..!

Share it if you like it

ஈரோட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் கழிவுநீர் வடிகால், ஒருநாள் மழைக்கே இடிந்து விழுந்த சம்பவம் மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நடந்து வரும் மேம்பாட்டுப் பணிகள் அனைத்தும் தரமற்றதாக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் இருக்கிறது. நடுவில் மின்கம்பங்களை வைத்து சாலை அமைப்பதில் தொடங்கி, தண்ணீர் ஓடிக் கொண்டிருக்கும் கழிவுநீர் கால்வாயில் புதிதாக கழிவுநீர் கால்வாய் கட்டுவது வரை தி.மு.க. ஒப்பந்ததாரர்களின் காமெடிகளுக்கு அளவே இல்லை. நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு ஊராட்சியில் கட்டப்பட்ட தண்ணீர் தொட்டி வெறும் 20 நாட்களிலேயே இடிந்து விழுந்ததில், பெண் ஒருவர் உயிரிழந்தார். ஈரோடு மாவட்டம் உக்கரம் ஊராட்சியில் கட்டப்பட்ட பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு மாதத்திலேயே இடிந்து விழுந்தது. தற்போது, ஈரோடு மாவட்டம் மாதம்பாளையம் ஊராட்சியில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் வடிகால் ஒரே நாளில் இடிந்து விழுந்திருக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மாதம்பாளையம் ஊராட்சியில் கழிவுநீர் வடிகால் கட்டப்பட்டு வருகிறது. இந்த சூழலில், புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. இதனால், கழிவுநீர் வடிகால் அமைக்கப்பட்டிருக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக, கழிவுநீர் வடிகால் சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு இடிந்து விழுந்தது. தரமற்ற செங்கல், மணல் மற்றும் குறைவான அளவு சிமென்ட் கொண்டு கட்டப்பட்டதால்தான் கழிவுநீர் வடிகால் இடிந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆகவே, தரமற்ற முறையில் கழிவுநீர் வடிகால் அமைத்த கான்ட்ராக்டர் மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமான முறையில் கழிநீர் வடிகால் கட்டித்தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

திராவிட மாடல் ஆட்சியில் திராவிட மாடல் கட்டுமானங்கள் எல்லாம் இப்படித்தான் இருக்கும்போல..!


Share it if you like it