ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: ஈரோடு ஆசிப் முசாப்தீன் கைது!

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு: ஈரோடு ஆசிப் முசாப்தீன் கைது!

Share it if you like it

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய ஈரோட்டைச் சேர்ந்த ஆசிப் முசாப்தீனை போலீஸார் கைது செய்தனர்.

அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவன் அக்தர் உசேன் லஸ்கர். இவன், கர்நாடக மாநிலம் பெங்களூவின் திலக்நகரில் தங்கி, ஆன்லைன் உணவு விற்பனை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தான். அதேசமயம், இவன் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புடன் நிரந்தர தொடர்பில் இருந்திருக்கிறான். மேலும், வாட்ஸ் ஆப், டெலிகிராம் உள்ள சமூக ஊடகங்கள் மூலமாக பயங்கரவாத அமைப்புகளுடன் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, சதிச் செயல்களில் ஈடுபட திட்டமிட்டு வந்திருக்கிறான். இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைக்கவே, கடந்த 24-ம் தேதி நள்ளிரவு வீட்டை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர், இவன் கொடுத்த தகவல் அடிப்படையில், தமிழகத்தின் சேலத்தில் வசித்து வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த அப்துல் அலிம் முல்லா என்பவன், கடந்த 25-ம் தேதி கைது செய்யப்பட்டான். மேலும், ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதும் இவன் மூலம் தெரியவந்தது. இதையடுத்து, ஈரோடு புறநகர் பகுதியான மாணிக்கம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் வசித்து வரும் ஆசிப் முசாப்தீன், அவனது நண்பர் முகமது யாசின் ஆகியோரிடம் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

சுமார் 30 மணி நேரம் நடந்த விசாரணையில், ஆசிப் முசாப்தீனுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், ஆசிப் வீட்டிலிருந்து லேப்டாப்கள், செல்போன்கள், டைரிகள், சிம்கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம் உள்ளிட்ட ஆவணங்கள் என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டன. பிறகு, என்.ஐ.ஏ. அளித்த புகாரின் பேரில், ஈரோடு வடக்கு போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஆசிப் முசாப்தீனை கைது செய்தனர். யாசினிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல, ஆசிப் வீட்டைச் சுற்றியுள்ள இதர வீடுகளிலும் ஈரோடு மாவட்ட போலீஸார் தனியாக விசாரணை மேற்கொண்டனர்.


Share it if you like it