விஜயின் கட்சி பெயரில் பிழை : நெட்டிசன்கள் விமர்சனம் !

விஜயின் கட்சி பெயரில் பிழை : நெட்டிசன்கள் விமர்சனம் !

Share it if you like it

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விஜய் விரைவில், அரசியலுக்கு வர உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், இன்று அவர் தனது கட்சியின் பெயரை முறைப்படி தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்துள்ளார். “தமிழக வெற்றி கழகம்” என்று அவரது கட்சிக்கு பெயரிட்டுள்ளார். இதற்கு பல அரசியல் கட்சி தலைவர்களும் வரவேற்று விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கியுள்ளதாக நேற்று அதிகாரப்பூர்வமாக தனது எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் நடிகர் விஜய் அறிவித்தார்.

மேலும் வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றத்திற்கு வழிவகுப்பதுதான் தனது கட்சியின் இலக்கு என்றும் அறிக்கையில் கூறியுள்ளார்.
இந்நிலையில் விஜய் தொடங்கியுள்ள கட்சி பெயரில் இலக்கண பிழை இருப்பதாக தமிழ் ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

உலகில் பழமையான மொழியான தமிழுக்கு இலக்கணம் என்பது உள்ளது. இலக்கணப்படி பார்த்தால் ‛தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியின் பெயர் என்பது ‛தமிழக வெற்றிக் கழகம்’ என வந்திருக்க வேண்டும். அதாவது வெற்றி என்ற வார்த்தையின் இறுதியில் வல்லின எழுத்தான ‛க’ என்பது ஒற்றுடன் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜயின் அரசியல் கட்சியின் பெயரில் ‛வெற்றிக்’ என்பதற்கு பதில் ‛வெற்றி’ என்றே உள்ளது. இதனால் நெட்டிசன்கள் நடிகர் விஜயை விமர்சனம் செய்து வருகின்றனர்.


Share it if you like it